இன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்

- கா. சண்முகம்.
சட்ட, உள்துறை அமைச்சர்

OnePeople.sg மற்றும் CNA ஆகிய இரண்டும் Roses of Peace ஆதரவுடன் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த இனம் தொடர்பான கருத்தரங்கில், நாம் எப்படி நம் கொள்கைகளில் உறுதியாக இருந்து வந்துள்ளோம் என்பதையும் இனங்களுக்கு இடைப்பட்ட உறவை நாம் எப்படி நிர்வகிக்கிறோம் என்பதையும் பற்றி நான் பேசினேன்.

உலகம் ழுழுவதுமே கலாசார கசப்புணர்வு அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் அடையாளத்தையும் உடைமை உணர்வையும் இழந்துவருவதாக அஞ்சுகிறார்கள்.

இந்த அச்சம், மெதுவடையும் உலகப் பொருளியல், அதிகரிக்கும் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுடன் சேர்ந்து கொண்டுள்ளது. கடும் போக்குடைய தேசியவாதிகளும் அரசியல் வாதிகளும் இத்தகைய பயத்தை இன்னும் ஊதிவிடுகிறார்கள்.

அமெரிக்காவில் இன அடிப்படையிலான உள்நாட்டு பயங்கரவாதச் சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு வெள்ளை ஆதிக்க இயக்கமே பின்னணியில் இருந்துள்ளதாக அமெரிக்க வேவுத்துறை தெரிவித்தது.

பதினேழு ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி தேசியவாத கட்சிகளுக்கு ஆதரவு கூடி வருவதாக கடந்த மே மாதம் பிபிசி நியூஸ் அறிவித்தது.

ஆசியாவில் சமய தீவிரவாதிகளால் தூண்டி விடப்படும் அதிக வன்செயல் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இலங்கை, மியன்மாரில் தேசியவாத புத்த பிக்குகள் ஆக்ரோஷமான பேச்சுகள் மூலம் சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக வன்செயல்களைத் தூண்டிவிடுகிறார்கள்.

ஒருசாரார் நலனை மட்டும் நாடும் அரசியல், இன, சமய, தேசியவாதம் ஆகிய போக்குகளுக்கு சிங்கப்பூர் விதிவிலக்கு அல்ல.

சுதந்திரம் அடைந்தது முதலே சமூக நல்லிணக்கத்துக்குச் செல்லும் பாதைக்கு வழிகாட்டும் ஐந்து கோட்பாடுகளை நாம் சார்ந்து இருந்து வருகிறோம்.

1) இனம், சமயத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது

இனம், சமயத்தை அரசியலில் இருந்து ஒதுக்கிவைப்பது முதல் கோட்பாடு.

சமயத் தலைவர்கள் தங்கள் சமயப் பிரசார மேடைகளைப் பயன்படுத்தி அரசியல் விவகாரங்கள் பற்றிய தங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும் அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக சமயத்தைப் பயன்படுத்தவும் நம்முடைய சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் தடை போடுகிறது. இதைப் பொறுத்தவரை நாம் மிகவும் உறுதின அணுகுமுறையைக் கையாளுகிறோம்.

2) பல இனத்தன்மையை உறுதிப்படுத்துவது

சீனர், மலாய்க்காரர், இந்தியர், மற்றவர் என்ற நம்முடைய கட்டமைப்பு, இனவாதத்தை நிலையூன்றச் செய்கிறது என்று சிலர் கூறி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பு தொடர்ந்து ஏற்புடையதாக இருக்கிறது என்றும் இது இன நல்லிணக்கத்தை நிலைநாட்டிவர உதவுகிறது என்றும் நான் நினைக்கிறேன்.

நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளதைபோல், இந்தக் கட்டமைப்பு முற்றிலும் குறை இல்லாத அல்லது சீரிய ஒன்று அல்ல என்றாலும், நம் சமூகத்தில் சிறுபான்மை இனத்தவருக்கு இடம் கொடுப்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த இது நமக்குத் தொடர்ந்து உதவுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

3) பொதுமொழி, சமய சார்பற்ற கல்வி

பொதுவான, நடுநிலைன மொழி ஒன்றை அன்றாடம் புழங்கி அதன் வழிகவும் அனைவருக்கும் சமயசார்பற்ற தேசிய கல்வியைப் போதிப்பதன் மூலமாகவும் எல்லா இன சமூகங்களையும் பிணைப்பது மூன்றாவது கோட்பாடு.

நான்கு அதிகாரத்துவ மொழிகள் நமக்கு இருக்கின்றன. இருந்தாலும் ஆங்கிலத்தை நாம் ஐக்கியத்துக்கான பொது மொழிகக் கொண்டு இருக்கிறோம், பள்ளிக்கூடங்களில், நிர்வாகத்தில் நிர்வாக மொழிக அது இருக்கிறது. இத்தகைய ஓர் ஏற்பாட்டை நாம் கொண்டு இருப்பதால் மூன்று முக்கிய இன மொழிகளில் எதற்கும் அனுகூலம் என்பது இல்லை.

4) அனைவருக்கும் சம வாய்ப்பு

இனம், சமயம் எப்படி இருந்தாலும் சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்கும் சரிசம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இதுவே நான்காவது கோட்பாடு.

5) சட்டத்துக்கு முன் அனைவரும் சரிசமம்

சிங்கப்பூரில் சட்டத்துக்கு முன் அனைவரும் சரிசமம். இதுவே நமது ஐந்தாவது கோட்பாடு. இது, சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையைப் பலப்படுத்த உதவி இருக்கிறது. சட்டங்களை நியாயமாக அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட இது உதவுகிறது. யாராவது வரம்பு மீறினால் அவரது சமயம், இனம் எப்படி இருந்தாலும் அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை உண்டு.

நாம் தொடர்ந்து நல்லிணக்கத்துடன் வாழ விரும்பினால், இன, சமய விவகாரங்களை மிகவும் கவனமாக நாம் கைள வேண்டும். பிரிவினைவாத, தனிமைப்படுத்தக்கூடிய குறுகிய உணர்வுகளைக் குறைக்க முயல வேண்டும்.

இந்தியாவில் இந்துவான ஒருவர்தான் தனக்குச் சாப்பாடு கொண்டு வந்து தரவேண்டும் என்று இந்துவான வாடிக்கையாளர் ஒருவர் ஓர் உணவு விநியோக நிறுவனத்திடம் கோரியதாக அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இத்தகைய கண்ணோட்டங்கள் இங்கு வேர் ஊன்ற நாம் அனுமதிக்கக்கூடாது. அண்மையில் சிங்கப்பூரில் உள்ள முக்கிய சமயங்கள் எல்லாம் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உறுதி தெரிவித்து அறிக்கை வெளியிட்டன. இது மிகவும் ஆற்றல்மிக்க அறிக்கை.

சிங்கப்பூர் போன்ற எந்த ஒரு பல இன சமூகத்திலும் இனவாதம் என்பது இருக்கும். அரசாங்க ஆதரவு பெற்ற, நிலைபெற்ற இனவாதம் நம்மிடம் இல்லை என்பதுதான் இதில் முக்கியம்.

இன சிறுபான்மையினரிடத்தில் சகிப்புத் தன்மை எப்படி இருக்கிறது என்பதை 140க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆராய்ந்தபோது சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பதாக 2016ல் ‘கேலப் உலக ஆய்வு’ தெரிவித்தது.

தனிப்பட்ட சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை, எப்போதாவது அவர்கள் இனவாத பிரச்சினையைச் சந்தித்தாலும்கூட, நமது அன்றாட வாழ்வின் உண்மை நடைமுறையில் இந்தச் சகிப்புத்தன்மை பிரதிபலிக்கப்படுகிறது. சமூக நல்லிணக்கத்துக்கு இட்டுச் செல்லும் பாதையில் நமக்கு வழிகாட்டும் இந்த ஐந்து கோட்பாடுகளை நாளுக்கு நாள் தொடர்ந்து நாம் பின்பற்றினால், பொதுவான வாய்ப்புகளை விரிவுபடுத்த கடுமைகப்பாடுபட்டால், நாம் இன்னும் சிறந்த, இன்னும் நல்லிணக்கம் மிகுந்த சமூகமாகத் திகழ்வோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!