பணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்

பேராசிரியர் டாமி கோ

சிங்கப்பூர் போன்ற செல்வச் செழிப்பு மிக்க நாடுகள், வெளிநாட்டுப் பணிப் பெண்கள் போன்ற எளிதில் பாதிக்கக் கூடிய ஊழியர்களை இன்னும் சிறந்த முறையில் நடத்த முடியும். சிங்கப்பூரில் ஏறக்குறைய 250,000 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வேலை செய்கிறார்கள்.

நானும் எனது மனைவியும் சிங்கப்பூரிலும் நியூயார்க், வாஷிங்டன் நகர்களிலும் பணிப்பெண்களை வேலையில் அமர்த்தி இருந்தோம். அந்தப் பெண்களைப் பொறுத்த வரையில் நாங்கள் கீழ்கண்ட விதி முறைகளைப் பின்பற்ற முயன்றோம். இவற்றை சிங்கப்பூரர்களும் பரிசீலிக்க லாம் என்று கருதுகிறேன்.

விதிமுறை 1: சக மனிதராக நடத்தவும்

உங்கள் பணிப்பெண்ணை சக மனிதராக மதித்து நடத்துங்கள். இதுவே மிக முக்கியமான விதி. பணிப்பெண் உங்களைவிட தாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவரோ அடிமையோ அல்ல. அவருக்கும் கண்ணியம் முக்கி யம். ஏழ்மை காரணமாக இங்கு வேலைக்கு வந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவ ருக்கு உள்ளது. சிங்கப்பூரில் மாதர்கள் வேலைக்குச் செல்ல பணிப்பெண்கள் உறுதுணையாக, உதவிக்கரமாக இருக்கிறார்கள்.

பிள்ளைகள் முதல் உடற்குறையுள்ள வர்கள் வரை பலரையும் கவனித்துக் கொள்வது உட்பட எல்லா வேலையையும் அவர்கள் செய்கிறார்கள். இங்கு நாம் சுகமாக வாழ அவர்கள் செய்யும் உதவி ஒன்றும் குறைந்தது அல்ல.

விதிமுறை 2: குடும்ப உறுப்பினராக நடத்துங்கள்

பணிப்பெண்ணை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்துங்கள். இப்படி அவரை நடத்தும்போது நாம் எங்கு சென்றாலும் உடன் வர அவருக்கு உரிமை இருக்கிறது. அந்த வகையில் ஹோட்டல், உணவகம், பொழுதுபோக்கு மன்றம் என்று நாம் எங்கு சென்றாலும் நம்முடன் நமது பணிப்பெண் களும் அங்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

விதிமுறை 3: பணிப்பெண்ணுக்கு ஓர் அறை தேவை

உங்கள் பணிப்பெண்ணுக்கு வீட்டில் ஓர் அறையை ஒதுக்கித் தாருங்கள். இதுவே நான் கூறும் மூன்றாவது விதி. நம் அனைவருக்குமே தனிமை அவ சியம். பணிப்பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்ல. நாள் முழுவதும் வேலை செய்யும் பணிப்பெண், ஓய்வு எடுத்துக்கொண்டு பாட்டு கேட்க, படம் பார்க்க, தன் குடும்பத்தாருடன் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

தங்கள் வீட்டில் போதிய அறைகளைக் கொண்டிருக்கும் உரிமையாளர்கள், பணிப் பெண்ணுக்கு ஓர் அறையை ஒதுக்கித் தர வில்லை என்றால் அது தவறான மனப்போக்காகவே இருக்கும்.

சிங்கப்பூரர்கள் அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறார்கள். பணிப்பெண்ணுக்குத் தனியாக ஓர் அறையை ஒதுக்க இயலாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் அவருக்குப் படுக்கை அறையில் குடும்ப உறுப்பி னர்களுடன் போதிய இடத்தை ஒதுக்கித் தந்து தனிமையை ஏற்படுத்தித் தரலாம்.

நம்முடைய புதிய கட்டடங்கள் சில வற்றில் உள்ள பணிப்பெண்கள் அறையின் அளவு எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அவை சிறைச்சாலை அறை யைவிட சிறியதாக இருக்கின்றன. பணிப்பெண்ணுக்கு விசாலமான இடத்தை ஒதுக்கித் தருவது பற்றி பரி சீலிக்கும்படி நம் கட்டுமான அதிகாரி களுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.

விதிமுறை 4: நல்ல முறையில் உணவு அளியுங்கள்

நம்மைப் போலவே பணிப்பெண்ணும் அதே உணவைச் சாப்பிட வேண்டும் என்ற விதிமுறையை நானும் என் மனைவியும் கடைப்பிடிப்போம். தனியாகச் சாப்பிடும் படியோ தரம் குறைந்த உணவைச் சாப்பிடும் படியோ ஒருபோதும் நாங்கள் எங்கள் பணிப்பெண்ணிடம் கூறியதே கிடையாது.

சில முதலாளிகள் தாங்கள் சாப்பிடுவது போல் பணிப்பெண் சாப்பிடக்கூடாது, குறைந்த விலையில் கிடைக்கும் உணவை அவர்கள் சாப்பிட வேண்டும் என்று கருது கிறார்கள். இது எனக்கு கவலை தருகிறது.இப்படிப்பட்ட அணுகுமுறை காரணமாக சில பணிப்பெண்கள் தங்களுக்குத் தர மற்ற உணவு கொடுக்கப்படுவதாக புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

பணிப்பெண்கள் எழுப்பி இருக்கும் ஐந்து பிரச்சினைகளில் உணவு, சத்துணவு பற்றிய கவலை ஓர் அம்சமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாளிகள், பணிப்பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு அளிக்க வேண்டும் என்று கூட அமைச்சு நிபந்தனை விதித்து இருக்கிறது. சிங்கப்பூர் போன்ற செல்வச் செழிப்பான நாட்டில் பணிப்பெண்களை முதலாளிகள் பட்டினி போடுகிறார்கள் என்றால் அது உண்மையிலேயே அவமானம்தான்.

விதிமுறை 5: வன்செயலே வேண்டாம்

எந்தவொரு சூழலிலும் பணிப்பெண் களிடம் முதலாளிகள் வன்செயல்களால் மூர்க்கமாக நடந்து கொள்ளக்கூடாது. பணிப்பெண்களை அடித்து உதைத்து உடல் ரீதியில் கொடுமைப்படுத்தும் பயங் கரமான கதைகளை எல்லாம் ஊடகத்தில் படிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சிங்கப்பூர் போன்ற நாகரிகமான நாட் டில் இப்படிப்பட்ட அரக்கர்கள் இருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மற்றவர்களைக் கொடுமைப்படுத்து வோரும் அப்படிப்பட்ட மனநிலை பித்து பிடித்தவர்களும் நம்மிடையே இருக்கிறார் கள் என்பது வருந்தத்தக்க ஓர் உண்மை.

வெளிநாட்டு பணிப்பெண்களை வேலை யில் அமர்த்த விரும்பும் ஒவ்வொரு முத லாளியும் மனோவியல் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்று மனிதவள அமைச்சு நிபந்தனை விதிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

பணிப்பெண்களை உடல் ரீதியில் கொடுமைப்படுத்தும் செய்கைகளைப் போலிசும் நீதிமன்றமும் மிகக் கடுமை யானதாகக் கருதுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

விதிமுறை 6: திட்டாதீர்கள்

பணிப்பெண்களைத் திட்டாதீர்கள். திட்டுவது, உடல் ரீதியாகக் கொடுமைப் படுத்துவது ஆகியவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை பணிப்பெண்ணுக்கு உண்டு. அன்றாடம் முதலாளி ஒரு பணிப் பெண்ணைத் திட்டிக்கொண்டே இருந்தால் அவருக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிடும்.

விதிமுறை 7: போதிய ஓய்வு கொடுங்கள்

போதிய அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய உரிமை பணிப் பெண்ணுக்கு இருக்கிறது. இதுவே எனது ஏழாவது விதி. இல்லப் பணிப்பெண்ணுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற சட்டம் 2013 முதல் நடப்பில் உள்ளது.

ஆனால் எல்லா முதலாளிகளுமே இந்தச் சட்டத்தைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. நல்ல ஒரு முதலாளி வாரம் ஒரு நாள் ஓய்வு கொடுப்பதற்கும் மேலாக அன்றாடம் பணிப்பெண்ணுக்குக் கொஞ்சம் ஓய்வு நேரத்தையும் ஒதுக்கித் தரவேண்டும். என்னுடைய மனைவி நாள்தோறும் பிற்பகலில் பணிப்பெண்களுக்கு 2 மணி நேரம் ஓய்வு கொடுத்து விடுவார். பணிப்பெண்கள் இயந்திரம் அல்ல. அவர்களும் மனிதப் பிறவிகள்தான் என் பதை முதலாளிகள் மனதில் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்குத் தண்டனை விதித் தொகுப்பு (Penal Code) மற்றும் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமன சட்டம் ஆகியவை பாதுகாப்பு அளிக்கின்றன. ஆனால் அவர்களுக்கு வேலை நியமன சட்டப் பாதுகாப்பு இல்லை. அனைத்துலக தொழிலாளர் நிறு வனத்தில் சிங்கப்பூரும் ஓர் உறுப்புநாடு. ‘‘இல்லப் பணிப்பெண்களுக்குக் கண்ணியமாக வேலை வழங்கும் உடன்பாடு’’ என்ற ஓர் உடன்பாட்டை இந்த நிறுவனம் 2011ல் கைக்கொண்டது.

ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த அதிபர் ஹலிமா யாக்கோப் அதில் முக்கிய பங்காற்றினார். அந்த உடன் பாடு 2013ல் நடப்புக்கு வந்தது. மற்ற ஊழியர்களைப் போலவே பணிப்பெண்களுக்கும் அதே உரிமை களை வழங்க வேண்டும் என்று அந்த உடன்பாடு நிபந்தனை விதிக்கிறது.

ஒரு நாள் சிங்கப்பூரும் அந்த உடன் பாட்டைத் தழுவிக்கொள்ளும் ஒரு தரப்பாக ஆகும் என்று நான் நம்புகிறேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!