ஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்

சிங்கப்பூரர்கள் முதலாம் உலக நகரில் வசிக்கிறார்கள் என்றாலும் சிலரிடம் மிக மோசமான கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன.

முதலாம் உலக மக்களாகத் திகழ வேண்டுமானால் குப்பை போடுவதை நிறுத்த வேண்டும். மற்றவர்களின் நலனை எண்ணிப் பார்த்து நடந்துகொள்ள வேண்டும். நம் அடிப்படை குணநலன்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் மூன்றாம் உலக மக்களைக் கொண்ட முதலாம் உலக நாடாக இருக்கிறது என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிங்கப்பூர் 200வது ஆண்டு மாநாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி உரையாற்றியபோது நான் குறிப்பிட்டேன்.

ஆற்றல் மிகுந்த பொருளியல், அருமையான வாழ்க்கைத்தரம் போன்ற பல முதல்தர அம்சங்கள் சிங்கப்பூரில் இருக்கின்றன.

ஆனால் மக்கள் என்ற முறையில் நம்மில் சிலரிடம் இருக்கும் பழக்கங்

கள் அந்தத் தரங்களுக்கு ஏற்றவை

யாக இல்லை என்பதே நான் கூறவரும் கருத்தாகும்.

பார்க்கப்ேபானால் மூன்றாம் உலக தரங்கள் என்று நான் குறிப்பிட்டிருக்கக்கூடாது. சில ஏழை நாடுகளில் மக்கள் கருணையோடும் பெருந்தன்மையோடும் குடிமை உணர்வோடும் இருக்கிறார்கள் என்பதை என்னுடைய நண்பர்கள் பலரும் என்னிடம் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அது உண்மைதான்.

சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகத் திகழ தகுதி பெற வேண்டுமானால் அவர்கள் கீழ்க்கண்ட தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும்.

தேர்வு 1:

குப்பை போடுவதை நிறுத்த வேண்டும். 1959ல் மக்கள் செயல் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பல இயக்கங்களை மேற்கொண்டது.

1960களில் ஒன்பது இயக்கங்கள், 1970களில் மூன்று இயக்கங்கள், 1980களில் நான்கு இயக்கங்கள் சிங்கப்பூரில் நடத்தப் பட்டன.

அவற்றின் விளைவாக தூய்மையான நகராக சிங்கப்பூர் உலகளவில் திகழ்கிறது. ஆனாலும் மேன்மேலும் சிங்கப்பூரர்கள் பழையபடி குப்பை போடும் பழக்கத்திற்குத் திரும்புவதாகத் தெரிகிறது.

தைவானில் பள்ளிக்கூடங்களை அவற்றின் மாணவர்களே சுத்தப்படுத்துகிறார்

கள். இந்த நடைமுறையைப் பின்பற்றுவது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி ‘தூய்மைஎஸ்ஜி நாள்’ வருகிறது. அந்த நாளில் தங்களுடைய குடியிருப்புப் பேட்டையை சிங்கப்பூரர்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.

அன்றைய தினம் குடியிருப்புப் பேட் டைகளின் துப்புரவு ஊழியர்களுக்கு நகர மன்றம் விடுப்பு கொடுத்துவிடும்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்த

விரும்புகிறேன்.

தேர்வு 2:

ஜப்பான், தென்கொரியா, தைவானைப் போல தூய்மையான பொதுக் கழிவறைகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பது இரண்டாவது தேர்வு.

முன்பெல்லாம் சிங்கப்பூரில் உள்ள கழி வறைகள் அசுத்தமாக இருந்தன. அரசாங்க சார்பற்ற அமைப்பும் அரசாங்கமும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் அந்த நிலைமை மாறியுள்ளது.

சிங்கப்பூர் கழிவறைச் சங்கம், உலக கழிவறை அமைப்பு ஆகியவற்றைத் தோற்று வித்த திரு ஜேக் சிம் எனும் சிங்கப்பூரர் உலக அளவில் மேற்கொண்ட அரும் முயற் சியால் ஐக்கிய நாடுகள் நிறுவனம் நவம்பர் 19ஆம் தேதியை வருடாந்திர உலக கழி வறை தினமாக அறிவித்தது.

சிங்கப்பூர் கழிவறைச் சங்கமும் தேசிய சுற்றுப்புற அமைப்பும் சிங்கப்பூரில் சுத்த மான கழிவறைகளுக்கான தேசிய இயக் கத்தை நடத்தின.

சிங்கப்பூரில் உள்ள சுமார் 70 விழுக்காட்டு பொதுக் கழிவறைகளுக்கு

நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 30 விழுக்காட்டு பொதுக் கழிவறைகள் இன்னமும் மூன்றாம் உலகத் தரத்திலேயே இருக்கின்றன.

தங்களுடைய பொதுக் கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருப்பது எப்படி என்பதை முதலாம் உலகத் தர மக்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு 3:

குடிமை உணர்வும் நல்ல நடத்தைகளும் மூன்றாவது தேர்வு. “அன்புகூர்ந்து”, “தயவு செய்து”, “நன்றி” என்று சொல்வதை பல சிங்கப்பூரர்களும் மறந்துவிட்டார்கள்

என்று நினைக்கிறேன்.

மின்தூக்கிக் கதவு அல்லது ரயில் கதவு திறக்கும்போது சில சிங்கப்பூரர்கள் வெளியே வருவோருக்கு வழி கொடுக்

காமல் திடுதிடுவென உள்ளே நுழைகிறார்கள்.

நகரும் படிகளில் ஏறிச் செல்லும்போது இடது பக்கமாக நின்று செல்ல வேண்டும் என்பதையும் மறந்துவிடுகிறார்கள். ரயில்களில் இருக்கைகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகளை சில இளம் சிங்கப்பூரர்கள் மதிப்பதாகத் தெரியவில்லை.

உணவங்காடிக் கடைகளில் பல சிங்கப்பூரர்கள் சாப்பிட்ட தட்டுகளை அவற்

றுக்கான இடங்களில் வைப்பதில்லை.

உணவகங்களிலும் திரையரங்குகளிலும் கைபேசிகளில் சில சிங்கப்பூரர்கள் மற்றவர்களுக்கு இடையூறு தரும் வகையில் சத்தம்போட்டு பேசுகிறார்கள்.

முதலாம் உலக நாடுகளில் மக்கள் இப்படி மற்றவர்களின் நலனை எண்ணிப் பார்க்காமல் நடந்து கொள்ளமாட்டார்கள். முதலாம் உலக மக்கள் தொண்டூழியத்திலும் நன்கொடை உணர்விலும் தீவிரமாக இருப்பார்கள்.

தேர்வு 4:

நற்பண்புக் கலாசாரம் நான்காவது தேர்வாகும். முதலாம் உலக மக்கள் நாகரிகம் மிக்கவர்களாக, கருணை, பரிவு உணர்வோடு, மற்றவர்களைப் பணிவன்போடு மதித்து நடக்கும் குணம் உள்ளவர்கள்.

கலை, கலாசாரத்தைப் போற்றிப் புகழ வேண்டும், கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் மதிக்க வேண்டும், இசையை ரசிக்க வேண்டும், அரும்பொருளகங்களுக்குச் செல்ல வேண்டும், வரலாறு, பாரம்பரியத்தில் ஆர்வம் இருக்க வேண்டும்.

இதைப் பொறுத்தவரையில், அண்மைய ஆண்டுகளாக பல சிங்கப்பூரர்கள் மரபுடைமையிலும் வரலாற்றி

லும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.

தேர்வு 5:

இயற்கை, சுற்றுச்சூழல் மனப்

போக்கு ஐந்தாவது தேர்வு. முதலாம் உலக மக்கள் இயற்கையை விரும்புவார்கள். சுற்றுச்சூழலில் அக்கறை

காட்டுவார்கள்.

சிங்கப்பூரர்கள் தங்கள் கட்டடங்க ளில் அளவுக்கு அதிகமாக குளிர்சாதனங்களைப் பயன்படுத்தி ஏராளமான எரிசக்தியை வீணடிக்கிறார்கள்.

எரிசக்தியைச் சேமிக்கவும் செம்மையாகப் பயன்படுத்தவும் பொதுமக்களை ஊக்கப்படுத்த சுற்றுப்புற, நீர்வள அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரிய

மும் மேலும் பலவற்றைச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. உணவு, தண்ணீரைப் பொறுத்தவரையிலும் விரயம் அதிகமாக இருக்கிறது.

விரயமற்ற சமூகமாக சிங்கப்பூரை ஆக்க அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளை நான் வலுவாக ஆதரிக்

கிறேன்.

இப்படி கூறுவதால் பலரும் என்னை வெறுப்பார்கள் என்று தெரிந்தும் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாக இல்லை என்று நான் கூறுகிறேன்.

நான் இங்கு குறிப்பிட்டு உள்ள ஐந்து தேர்வுகளிலும் நாம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்பதே எனது நம்பிக்கை. இதைச் சாதித்தால்தான் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்கள் என்று நாம் கூறிக்கொள்ள முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!