வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா

ஹன்சிகா, உதயநிதி நடித்து அண்மையில் வெளிவந்த படம் 'மனிதன்'. அந்தப் படம் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றாலும் அதிக இடங்களில் பெட்டிக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தேர்தல் என்கின்றனர் ஒரு சிலர். இதனால் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகா. ஹன்சிகா 'மனிதன்' படத்தை மிகவும் நம்பியிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

'அரண்மனை=2' படத்திற்குப் பிறகு ஹன்சிகா நடித்த 'போக்கிரி ராஜா', 'உயிரே உயிரே', போன்ற படங்களும் ஹன்சிகா எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்க வில்லை. தற்பொழுது அவர் கைவசம் ஜெயம் ரவியுடன் நடித்த 'போகன்' படம் மட்டுமே இருக்கிறது. இதற்கு முன்பு அவர் ஜெயம் ரவியுடன் நடித்த 'எங்கேயும் காதல்', 'ரோமியோ ஜூலியட்' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்ததால் இந்த 'போகன்' படத்தைப் பெரிதாக எதிர்பார்க்கிறார் ஹன்சிகா.

மேலும் திடீரென்று படவாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அடுத்தபடியாக கதாநாயகி என்பதிலிருந்து விடுபட்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மற்றொரு சுற்று வர முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா. அதனால் தனக்கு ஏற்கெனவே வாய்ப்புக் கொடுத்த சில முன்னணி இயக்குநர்களைச் சந்தித்து, "வித்தியாசமான கதாபாத்திரங் களாக வில்லி வேடம் கொடுத்தாலும் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்," என்று கூறியுள்ளார் ஹன்சிகா. தற்போது திரிஷா நடித்து வரும் சில படங்களைச் சுட்டிக்காட்டி அந்த மாதிரியான கதைகளில் நடிக்க அதிக ஆர்வமாக இருப்பதாக தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார் ஹன்சிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!