திவ்யாவின் மனிதநேயம்

இளம்நாயகி ஸ்ரீதிவ்யாவின் மனிதநேயத்தையும் பிறர்க்கு உதவும் பாங்கையும் திரையுலகத்தினர் வெகுவாகப் பாராட்டுகின்றனர். அதற்குப் பின்னணியாக அமைந்த சம்பவங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ராஜபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 'மருது' படப்பிடிப்பு. மாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் தங்குவிடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். செல்லும் வழியில் கூட்டமாக சிலர் எப்போதாவது வரும் டவுன் பேருந்துக்காகக் காத்திருக்கி றார்கள். காரில் அவர்களைக் கடக்கும் போது கண்ணாடி வழியாக வெளியே பார்த்த ஸ்ரீதிவ்யா பதறிப் போகிறார்.

காரணம், அந்தக் கூட்டத்துக்கு நடுவே ஒரு கர்ப்பிணிப் பெண் இடுப்பு வலியால் துடித்துக் கொண்டிருக் கிறார். காரை நிறுத்தச் சொல்லி இறங்கியவர் நேராக அவர்களிடம் செல்கி றார். ஸ்ரீதிவ்யாவைப் பார்த்ததும் அவர்கள் கர்ப்பிணியை மறந்து அவரைப் பற்றிப் பேசத் தொடங்க, கூட்டத்தை ஒருமுறை முறைத்துவிட்டு, "மருத்துவமனைக்கு தானே போக வேண் டும். நான் அழைத்துச் செல்கிறேன்," என் கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணை யும் உடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு ராஜ பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றவர் உரிய நேரத்தில் அப்பெண்ணை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!