‘ஜாக்சன் துரை’

ஸ்ரீ கிரீன் புரொடெக்ஷன் தயாரித்துள்ள படம் ‘ஜாக்சன் துரை’. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ராஜேந்திரன், ஹாலிவுட் நடிகர் ஷாஜரி உள்பட பலர் நடிக்கிறார்கள். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு - எம்.எஸ்.சரவணன். எழுத்து, இயக்கம், தரணிதரன். காவல்துறை அதிகாரியான சிபி ராஜ் ஒரு கிராமத்தில் நிலவும் பிரச்சினையைத் தீர்க்க துறை அதிகாரி களால் அனுப்பி வைக்கப்படுகிறார்.

சென்ற இடத்தில் சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இருந்து அந்தக் கிராமத்தை சிபிராஜ் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம். சத்யராஜ் முதல்முறையாக இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்தி ருக்கிறார். “1940ல் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் படம் முழுவதையும் கலகலப்பாக ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த திகில் கதையாகக் கொடுக்கிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் படமாக்கி உள்ளோம். சத்யராஜின் வித்தியாசமான நடிப்பை இதில் காணலாம். இது நிச்சயம் அனைவரையும் கவரும்,” என்கிறார் இயக்குநர் தரணிதரன்.

‘ஜாக்சன் துரை’ படத்தின் ஒரு காட்சியில் சத்யராஜ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்