‘பைசா’

‘பசங்க’ ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ‘பைசா’. இவர்களுடன் நாசர், ராஜசிம்மன், மயில்சாமி, சென்ட்ராயன், தீபிகா உள்பட பலர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப் பதிவு செய்ய, ஜே.வி. இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, அப்துல் மஜீத், ரங்கநாதன் ராஜூ, கண்ணன், பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை தந்த அப்துல் மஜீத் இயக்குகிறார்.

“மனிதர்களைத் தன்பிடியில் வைத்திருக்கும் பணத்தை கதைக் கரு வாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது. ‘பைசா’ என்பது வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை. என்றாலும், அதுவே வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. இதுதான் இப்படத்தின் ஒருவரிக்கதை,” என்கிறார் அப்துல் மஜீத். “மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கிய கடமை. அந்த எதிர்பார்ப்புகளை இந்தப் படம் நிறைவேற்றும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் நாயகன் ஸ்ரீராம்.