கல்லூரி மாணவியானார் கீர்த்தி சுரேஷ்

'சைமா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் 'இது என்ன மாயம்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது விஜய்யுடன் பெயரிடப்படாத படத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவியாக நடிக்கின்றார். விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தை பரதன் இயக்குகிறார். அதில் ஒரு விஜய் தைரியசாலியாகவும் மற்றொருவர் பய உணர்வு கொண்டவராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு வேடங்களில் ஒரு விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்சும் மற்றொரு விஜய்க்கு ஜோடியாக அபர்ணா வினோத்தும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது.

கல்லூரிக்குச் செல்லும் கீர்த்தி சுரே‌ஷுக்கும் விஜய்க்குமிடையே காதல் ஏற்படும் காட்சிகளைச் சென்னையில் கல்லூரிக்குள் படமாக்க இருக்கிறார் பரதன். கீர்த்தி சுரேஷ் கல்லூரிக்குச் சென்று படிப்பது போன்ற காட்சிகளையும் விஜய் மாணவர்களுடன் இணைந்து கலகலப்பாக வகுப்பறைகளில் படிப்பது போன்ற காட்சிகளையும் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. விஜய் 'நண்பன்' படத்திற்குப் பிறகு கல்லூரி மாணவனாக இந்தப் படத்தில் நடிக்கிறார். அதனால் உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து பார்ப்பதற்கு மாணவன் போன்று இளமையாக தோற்றம் அளிக்கிறார். இந்தப் படம் விஜய்யின் 60வது படம் என்பது குறிப்பிடத்தக்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!