‘றெக்க’ கட்டிப் பறக்கும் விஜய் சேதுபதி

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தர்மதுரை'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தான் வளர்ந்து வந்தபோதும் வளர்ந்து கொண்டிருந்த சில நடிகைகளுக்குத் தன்னுடன் நடிக்க வாய்ப்பளித்து வந்தார். ஆனால் இப்போது முன்னணி கதாநாயகனாகிவிட்டதால் அவரும் முன்னணி கதாநாயகிகளைத் தனக்கு ஜோடியாக்கி வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரௌடிதான்' படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த இவர், இப்போது சீனுராமசாமி இயக்கியுள்ள 'தர்மதுரை' படத்தில் முன்னணி நடிகை தமன்னாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும், 'தர்மதுரை' படத்திற்காக தமன்னாவை ஒப்பந்தம் செய்ய மும்பை சென்ற இயக்குநர் சீனுராமசாமியிடம் முழுக்கதையையும் கேட்டிருக்கிறார் தமன்னா. அதன் பின் அவர் கேட்ட பெரும் தொகையைக் கொடுக்க இயக்குநர் ஒத்துக்கொண்டதையடுத்து நடிக்க ஒத்துக்கொண்டாராம் தமன்னா.

இந்தப் படம் முதலில் குறைந்த செலவில் எடுக்க இருந்தது. ஆனால் தமன்னாவின் சம்பளத்தினால் பெரிய வரவுசெலவுப் படமாகிவிட்டதாம். முதல் மூன்று நாட்கள் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த தமன்னா, "விஜய் சேதுபதி அலட்டிக்கொள்ளாமல் இயற்கையாக நடிக்கிறார். அதனால் நானும் சினிமாத்தனம் இல்லாமல் அவரைப்போல இந்தப் படம் முழுவதும் அலட்டிக் கொள்ளாமல் இயற்கையாக நடிக்கப் போகிறேன்," என்று இயக்குநரிடம் சொல்லி அசல் மதுரைக்காரப் பெண்ணாக மாறி நடித்தாராம் தமன்னா. இந்தப் படம் 'ஆட்டோகிராப்', 'பிரேமம்' வரிசையில் காதல் கலந்த உணர்ச்சிமிக்க படமாக உருவாகி இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.

'தர்மதுரை' படத்தில் விஜய் சேதுபதியும் தமன்னாவும் மருத்துவர்களாக நடிக்கும் காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!