சூர்யா பக்கம் திரும்பும் நயன்

தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவருடைய கடைக்கண் பார்வை தற்பொழுது விக்னேஷ் சிவன் மீது விழுந்திருக்கிறது. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்களாக வலம் வருகின்றனர். அதனால் தன் காதலருக்கு நல்ல பட வாய்ப்புகளைத் தேடித் தரும் வேளையில் இறங்கியிருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்கும் வேலையில் இறங்கியிருந்தார் நயன்தாரா. அஜித்திடம் அதுபற்றி பேசுவதற்கு ஆட்களை அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதனால் இனிக் காத்திருப்பது சரியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் நயன்தாரா.

தன்னுடைய முதல் படத்தில் முன்னணி நாயகனை வைத்து தயாரித்து அதை வெற்றிப் படமாக்கவேண்டும் என்ற வேகத்தில் இருக்கும் நயன்தாரா அஜித்துக்கு அடுத்து சூர்யாவிடம் கதையைச் சொல்லி ‘கால்‌ஷீட்’ கேட்டு ஆளை அனுப்பி இருக்கிறாராம். இன்னும் சூர்யாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். காத்திருக்கிறார் நயன்தாரா. ‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து, ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’ படங்களில் அதிகக் கவர்ச்சி இல்லாமல் நடித்திருக்கிறார். இதற்குக் காரணம் விக்னேஷ் சிவன் என்கின்றது கோலிவுட்.

Loading...
Load next