சவாலான பாத்திரங்களில் நடிக்க விரும்பும் ஸ்ரீதிவ்யா

“எனக்குப் பாவாடை தாவணி தான் மிகவும் பிடித்த உடை. ஆனால், ஸ்ரீதிவ்யா இதற்குத்தான் லாயக் கானவர் என்று ஒருமுறை முத்திரையை ரசிகர்கள் குத்திவிட்டார்கள் என்றால், அது என் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல,” என்று விளக்கம் வருகிறது. ஏற்கெனவே ‘ஜீவா’ படத்தில் நாகரிகப் பெண்ணாக நடித்தி ருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அண்மையில் வெளியான ‘காஷ்மோரா’ படத்திலும் நாகரிக பெண்ணாகத் தோன்றியதை ரசிகர்கள் பாராட்டினார்கள். எல்லா வகையான கதாபாத்திரங் களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நடிகையின் ஆசையாக இருக்கும். அதற்காக இனிமேல் கிராமத்துப் பெண் வேடமாக இருந்தால், நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. சவாலான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயார்.

‘மாவீரன் கிட்டு’ படத்தில் நடிப்பது குறித்து?

“ஆம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் நடித்து வருகிறேன். இதிலும் கிராமத்துப் பெண் வேடம்தான். 1980ஆம் ஆண்டு களில் நடப்பது போன்ற கதை. அதில் என் கதாபாத்திரத்தின் பெயர் கோமதி. தனிப்பட்ட முறையில் நான் ரசித்து நடிக்கும் படம் என்று சொல்லலாம். “சுசீந்திரன் சார் படம் என்றால், கண்ணை மூடிக் கொண்டு கதையே கேட்காமல் நடிக்கலாம். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் அவர். என்னிடம் அவர் கதை சொன்ன போது, இதில் என் கதாபாத்திரம் சவால் மிகுந்ததாகவும், புகழ் தரக்கூடியதாகவும் இருக்கும் என்று மனதில் தோன்றியது. அதனால் நான் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புக்குச் செல்லும் முன் வீட்டில் பழகிப் பார்த்தேன்.

“என் தாயிடம் அவரது இளமைக்கால வாழ்க்கை முறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டேன். எதுபோன்ற உடைகளை அணிவது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரிவாகச் சொன்னார். “அவரது வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டே படப்பிடிப்பில் நடித்தேன். இந்தப் படத்துக் காக நானே பின்னணி குரலும் கொடுத்திருக்கிறேன் என்பது கூடுதல் தகவல்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை