தமிழில் நடிக்க விரும்பும் சாய் பல்லவி

தமிழில் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாக சாய் பல்லவி தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் பிறந்த தமிழ்ப் பெண்ணான இவர் படிப்பை முடிக்க ஓராண்டு இருந்தபோது ‘பிரேமம்’ மலையாள படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் பிரபலமாகி, அனைவராலும் பேசப்பட்டது.

இதனால் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் தமிழ்ப் படத்தில் நடிக்க மட்டும் அவரை யாரும் அழைக்கவில்லையாம். “தமிழில் நடிக்க இதுவரை யாரும் அழைக்கவில்லை. நடிக்க வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன், அப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது. பாத்திரத்துக்கு தேவை என்றால் அதற்கு ஏற்ப நடிப்பதில் தவறு இல்லை. திணிக்கப்பட்ட காட்சி என்றால் அதில் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், பாத்திரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் சாய் பல்லவி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்