சக நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா அறிவுரை

குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில நடிகைகள் தொகுப்பாளர்களாகப் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து விமர்சித்துள்ளார் நடிகையும் தயாரிப்பாளருமான ஸ்ரீப்ரியா. "நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும்போது, அது அங்கே உள்ள சிலருக்கு மட்டும்தான் தெரியவரும். ஆனால் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் சம்பந்தப்பட்டவர்களின் நிலை குறித்து அவர்கள் வசிக்கும் பகுதி தொடங்கி, உறவினர்கள் வரை பலருக்கும் தெரிய வருகிறது. குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதைத் தயவு செய்து நிறுத்தலாமே?" என்கிறார் ஸ்ரீப்ரியா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!