‘முதல்வராகும் ஆசை திரைப் படத்தால் நிறைவேறி உள்ளது’

தான் தமிழக முதல்வராக வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அவர் தற்போது 'சிரிக்க விடலாமா' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்து வருகிறார். இதை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி யுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், முதல் வராக வேண்டும் என்ற தமது ஆசை திரைப்படம் மூலம் நிறைவேறியதாகக் கூறினார். "இன்று முதல்வர் பதவியைப் பெறுவது எவ்வளவு சிரமமானது எனத் தெளிவாகத் தெரிகிறது.

அந்தப் பத விக்காக எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது? இப்படி யெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கி றேன். பாக்யராஜ் சாருடன் அந்தப் படத்தில் நான் நடித்தேன். எல்லோருக் கும் முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் அந்த படத் தின் மூலம் அந்த ஆசையை நிறை வேற்றிக் கொண்டேன். இப்படித்தான், நிஜத்தில் சாதிக்க முடியாததை நாங் கள் சினிமாவில் சாதித்துக் கொண்டு இருக்கிறோம்.

'சிரிக்க விடலாமா' படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், தீபா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!