சுஜா: நான் ரொம்ப துணிச்சலான நடிகை

இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒருமுறை சுஜா வரூணியின் பேட்டி தமிழக ஊடகங்களில் வெளியாகிறது. அவரும் ஒவ்வொரு பேட்டியிலும் அதிரடியாக சில கருத்துகளைக் கூறுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இப்போதும் சில விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார் சுஜா. வேறொன்றுமில்லை... ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கக்கூடிய துணிச்சல் தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது ஏதோ கவர்ச்சியை வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கான யுக்தி என ரசிகர்கள் கருதிவிடக் கூடாது என்பது சுஜாவின் வேண்டுகோள். பின் எதற்காக இப்படியொரு அறிவிப்பு என்பதுதானே உங்கள் கேள்வி?

"ஒரு காட்சிக்கு மிக அவசியம் என்றால் மட்டுமே தனது மேற்கண்ட துணிச்சலான அறிவிப்பை செயல்படுத்துவேன். மற்றபடி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய நான் தயாரல்ல," என்பதே சுஜா தரும் விளக்கம். அண்மையில் 'மிஜா', 'கிடாரி', 'குற்றம் 23' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுஜா வரூணி. மேலும் சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இனி அவர் மேற்கொண்டு சொல்வதைக் கேட்போம். "எனக்கு வாய்ப்பு அளிப்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குநரிடம் முதலில் நான் திறந்த மனதுடன் அவர் சொல்லும் கதையைக் கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் 'நச்' சென்று ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். இதுவே எனது விருப்பம்.

"மாறாக அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. பாலா, சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்கு நர்கள் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்தி ரங்கள் கிடைத்தாலும்கூட நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். "அந்த வகையில் திரைக்கதையின் உணர்வோட்டத்திற்கு ஏற்ப ஆடையில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும்கூட எனக்கு இருக்கிறது. அதே சமயம் கவர்ச்சிக்காகவே செயற்கையாகத் திணிக்கப்படும் காட்சிகளில் ஆபாசமான ஆடையணிந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லும் துணிவும் இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!