கார்த்தி: அன்பு மட்டுமே நிலைத்து நிற்கும்

பெண்களுக்கு எதிரான அவலங்கள், தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. சமூக அவலங்களைக் காணும்போது இளையர்களும் தமது ரசிகர்களும் அவற்றை எதிர்த்து நிற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். வரும் 25ஆம் தேதி கார்த்திக்குப் பிறந்த நாள். அவர் திரையுலகில் அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதேபோல் அவர் பெயரில் இயங்கும் மக்கள் நல மன்றத்தின் வயதும் அதுதான். இ ந் நி லை யி ல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னை யில் சந்தித்தார் கார்த்தி. இந்நிகழ்வில் ராஜ சேகர பாண்டியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ராஜு முருகன், சரவ ணன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்,

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல் வன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய கார்த்தி, சமூகத்தில் பல விஷயங்கள், சுற்றி உள்ள விஷயங்கள் எல்லாம் மாறிவிட்ட போதிலும் தமது நலம் விரும்பிகளின் அன்பு மட்டும் நிலைத்திருக்கிறது என்றார். "வெற்றி , தோல்வி என எல்லாவற்றை யும் பார்த்திருக்கிறேன். ஆனால் விழுந் தால் எழுந்து வரவேண்டும், அது தான் முக்கியம். நம்மைச் சுற்றி நிறைய தீய விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் நல்ல விஷயங்களை மட்டும் அனை வரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!