சுடச் சுடச் செய்திகள்

47 வயதில் நண்பரை மணக்கும் ஷோபனா

நடிகை ஷோபனா தனது 47 வயதில் நண்பரை மணக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மணமகனின் பெயர் விவரங்களோ, தொழில் பற்றியோ விவரங்கள் இல்லை. 1984ஆம் ஆண்டு மலையாளப் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்த நடிகை ஷோபனா அதன் பின்னர் பல தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சினிமா மட்டுமின்றி பரதநாட்டியத்திலும் ஆர்வம், திறமை கொண்ட ஷோபனா உலகம் முழுவதும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னையில் ஷோபனாவிற்கு சொந்தமான பரதநாட்டியப் பள்ளி யும் உள்ளது. இந்நாள் வரை திரு மணத்தில் ஆர்வம் காட்டாத ஷோபனா தன் 47 வயதில் திரு மணம் செய்து கொள்ள இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து ஷோபனா வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத் திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. ஆனால் ஷோபனா தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.