அன்பழகன்: தலைப்பில் ஒளிந்துள்ளது படக்கதை

சில படங்கள் மட்டுமே திரை காண்பதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத் தும். அந்த வகையில் ‘ரூபாய்’ படம் குறித்து கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. ‘சாட்டை’ மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அன்பழகன். இவர் பிரபுசாலமனிடம் உதவி இயக்கு நராகப் பணியாற்றியவர். முதல் படத்திலேயே இந்திய, தமிழகக் கல்வித் துறை தொடர் பான கடும் விமர்சனங்களைக் காட்சிப்படுத்தி இருந்தார் அன்பழகன். அவரது இரண் டாவது படம்தான் ‘ரூபாய்’. தனது முதல் படத்தைப் போலவே, ‘ரூபாய்’ கதையும் தலைப்பில்தான் உள்ளது என்கிறார்.

இது பயணப் பின்னணியில் நடக்கும் கதையாம். “தேனியில் இருக்கும் இரண்டு நண்பர்கள், சென்னை யில் இருக்கும் பெற்றோரின் வாழ்க்கையை அலசுகிறது கதை. காதல், குடும்ப உணர்வுகள், திகில், ரகசியம் என அனைத்து அம்சங்களுடன் ரூபாயைப் பற்றிய ஒரு சின்ன விஷயமும் படத்தில் இருக்கிறதாம். சரி... கதை? “கயல் சந்திரனும், கிஷோர் ரவிச்சந்திரனும் நண்பர்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே சொத்து லாரி. மூன்று மாதங் களாக லாரிக்கான தவணையைக் கட்ட முடியாத நிலை. “அடுத்த மூன்று நாட்க ளுக்குள் பணம் கட்டவில்லை என்றால், லாரி பறிமுதல் செய்யப் படும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், சென்னைக்கு ஒரு சவாரி கிடைக்கிறது.

‘ரூபாய்’ படக்காட்சியில் சந்திரன், ஆனந்தி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!