திகில் சம்பவங்களை சித்திரிக்கும் சத்ரு

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித் துள்ள ‘சத்ரு’ படத்தின் கதைக் கரு திகில் சம்பவங்களைக் கொண்டு சித்திரிக்கப்பட்டுள் ளது. இந்தச் சம்பவங்கள் 24 மணிநேரத்தில் நடப்பதாக இருக் கும் என்றும் கூறப்படுகிறது.  
‘பரியேறும் பெருமாள்’ கதி ரின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ‘சத்ரு.’ இப்படத்தில் கதிரின் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். 
‘ராட்டினம்’ படத்தில் கதா நாயகனாக வந்த லகுபரன் இப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் பொறுப்புகளை கவனிக் கும் நவீன் நஞ்சுண்டான் படம் பற்றி கூறுகையில், “இது ஒரு அதிரடி, திகில் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐவரை துணிச்சல்மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கிப்பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்துகிறார் என்பதே ‘சத்ரு’ படத்தின் திரைக் கதை. படம் மார்ச் 1ஆம் தேதி திரைக்கு வரும். ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித் துள்ளனர். ‘மரகத நாணயம்,’ ‘ராட்சசன்’ படங்களைத் தயாரித்த டில்லிபாபு இந்தப் படத்தை வெளி யிடுகிறார்,” என்றார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்