லாரன்ஸ் எங்கள் இலக்கு அல்ல: சீறுகிறார் சுரேஷ் காமாட்சி

சீமானுக்காக களத்தில் நிற்கும் பிள்ளைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் சீண்டுவது தேவையற்றது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு லாரன்ஸ் முதலில் பதிலளிக்க வேண் டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
சீமானின் ஆதரவாளர்கள் சிலர் தேவையின்றி தம்மைச் சீண்டுவதாக வும், தான் செய்து வரும் சமூக சேவைகளை விமர்சித்து வருவதாக வும் லாரன்ஸ் அண்மையில் புகார் எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்துள்ள சுரேஷ் காமாட்சி, சீமான் தம்பிகள் எனப் போலி முகங்களோடு சிண்டுமுடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
"காசு பாருங்கள். அல்லது உங்க ளுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரசாரம் செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக் கிறோம். உங்களை எங்கள் எதிரிப் பட்டியலின் இறுதியில்கூட வைக்க வில்லை. அதற்காக தேன்கூட்டில் கைவைக்காதீர்கள்" என லாரன்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!