உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் பூமிகா. இப்போதும் கூட பழைய பொலிவுடன் காணப்படுவதால், தமக்கு வயதான கதாபாத்திரங்கள் ஒத்துவராது என்று கறாராகக் கூறிவிடுகிறாராம்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க பூமிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதால் அவருக்காக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனராம். இப்போது அவர் பணிக்கு திரும்பியுள்ளார்.

இதில் தனக்கான கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் பூமிகா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon