‘நேர் கொண்ட பார்வை’: புதுப்பாடல் வெளியீடு

அஜித் கதாநாயகனாக நடிக்கும்  ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ‘காலம்’ என்ற பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ‘வானில் இருள்’ பாடலை அடுத்து இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.  பாடல்கள் அனைத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பாடல் பற்றிய அறிவிப்பு  தயாரிப்பாளர் போனி கபூரின் டுவிட்டர் கணக்கில்  நேற்று வெளியிடப்பட்டது. நவீன ‘எலெக்ட்ரோ’ மெட்டுகளைக் கொண்ட இந்தப் பாடலை அலிஷா தாமஸ், யுன்ஹோ ஆகியோர் பாடியுள்ளனர். இதன் வரிகளை நாகர்ஜூன் ஆர் யுன்ஹோ இயற்றியிருக்கிறார்.

இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா. அதனால் மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் என்று சூர்யாவை பாராட்டிய நடிகர் ரஜினி காந்த், இளையர்கள் தமிழின் சிறப்பு குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். கோப்புப்படம்

23 Jul 2019

'இளையர்கள் தமிழின் சிறப்பை அறிந்திருக்க வேண்டும்'

‘நுங்கம்பாக்கம்’ படத்தில் நடித்துள்ள புது முகங்கள் மனோ, ஐரா. படம்: ஊடகம்

23 Jul 2019

எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது ‘நுங்கம்பாக்கம்’