கதாநாயகன் டோனி: திரையுலகம் பாராட்டு

கதாநாயகன் டோனி: திரையுலகம் பாராட்டு

2 mins read
14fc2fef-66e8-4552-872c-08f3dfab85cb
இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கிரிக்கெட் தொடர் போட்டியை நேரில் கண்டு ரசித்த அனிருத், சிவகார்த்திகேயன். -

இந்­தி­ய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் தலை­வர் மகேந்­திர சிங் டோனி கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெற்­றி­ருப்­பது தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­ன­ரை­யும் சோகத்­தில் ஆழ்த்தி உள்­ளது.

நடி­கர்­கள் கமல்­ஹா­சன், சிவ­கார்த்­தி­கே­யன் எனப் பல­ரும் அவ­ரைப் பாராட்­டி­யும் இந்­தி­யக் கிரிக்­கெட்­டுக்கு அவ­ரது பங்­க­ளிப்பை மெச்­சி­யும் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

டோனி பல­ருக்கு முன்­மா­தி­ரி­யாக, வழி­காட்­டி­யா­கத் திகழ்ந்­தார் என்று நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் தெரி­வித்­துள்­ளார். மேலும் தனது அபா­ர­மான ஆட்­டத்­தால் கிரிக்­கெட் ரசி­கர்­களை டோனி மகிழ்­வித்­தார் என்­றும் கூறி­யுள்­ளார்.

"நீங்­கள் (டோனி) எப்­போ­துமே அபா­ர­மான தலை­வ­ராக இருந்­துள்­ளீர்­கள். ஓய்­வுக்­குப் பிற­கும் வேறு வகை­யில் எங்­களை வியப்­பில் ஆழ்த்­து­வீர்­கள் என உறு­தி­யாக நம்­பு­கி­றேன். உங்­க­ளது பங்­க­ளிப்­புக்கு எங்­க­ளு­டைய நன்றி," என்று சிவா தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது இந்­தப் பதி­வைக் கண்ட இயக்­கு­நர் சீனு. ராம­சாமி டோனி­யைப் போலவே சிவா­வும் பல­ருக்கு முன்­மா­தி­ரி­யாக இருப்­ப­தா­கப் பாராட்­டி­யுள்­ளார்.

"டோனி­யைப் போலவே உங்­க­ளது சொந்த களத்­தில் ரசி­கர்­க­ளைப் பல வகை­யி­லும் மகிழ்­விக்­கி­றீர்­கள். மேலும் புது­மு­கங்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் வாய்ப்­பு­களை வழங்­கு­கி­றீர்­கள்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் சீனு. ராம­சாமி.

இந்­தப் பதி­வால் நெகிழ்ந்­து­போன சிவ­கார்த்­தி­கே­யன் இத்­த­கைய வார்த்­தை­கள் தம்மை மேலும் ஊக்­கப்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­யுள்­ளார். சீனு ராம­சா­மி­யின் அன்­பான வார்த்­தை­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தா­க­வும் மற்­றொரு டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"உங்­க­ளு­டைய வாழ்த்­தால் மேலும் உழைக்க வேண்­டும் என்று தோன்­று­கிறது. தற்­போது உள்­ள­தை­விட மேலும் நல்ல நடி­க­னாக, மனி­த­னாக என்னை மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என விரும்­பு­கி­றேன்," என்று சிவ­கார்த்­தி­கே­யன் தெரி­வித்­துள்­ளார்.

நடி­கர் கமல்­ஹா­ச­னும் டோனி­யின் பங்­க­ளிப்­பைப் பாராட்டி உள்­ளார். இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், தன்­னம்­பிக்கை என்­பது விளை­யாட்­டுத் துறை­யி­லும் வாழ்க்­கை­யி­லும் எந்­த­ அளவுக்கு சாதிக்க உத­வும் என்­பதை செயல்­மு­றை­யில் டோனி விளக்­கிக் காட்­டி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"சிறிய நக­ரத்­தில் பிறந்து இந்­தி­யா­வின் கதா­நா­ய­க­னாக உரு­வெ­டுத்­துள்­ளீர்­கள். இக்­கட்­டான நேரங்­களில் நீங்­கள் திட்­ட­மிட்டு மேற்­கொண்ட முயற்­சி­கள், அமை­தி­யாக நடந்து கொண்­ட­வி­தம் ஆகி­ய­வற்றை இழந்­து­விட்­ட­தாக இந்­திய அணி, நிச்­ச­யம் உண­ரும். சென்­னை­யு­ட­னான உங்­க­ளது காதல் கதை நீடிப்­பதை அறிந்து மகிழ்­கி­றேன் என்று கமல்­ஹா­சன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே ஓய்வுக்குப் பின் டோனி சொந்த நிறுவனம் தொடங்கி தொழிலதிபராக வலம் வரப் போவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.