‘பயம் கூடாது’

நான் விரும்­பும் ஒரு விஷ­யம் கைகூடி வர­வில்லை என்­றால் கன்­னத்­தில் கைவைத்துக் கவ­லைப்­ப­ட­மாட்­டேன் என்­கி­றார் நடிகை தமன்னா.

எதி­லும் இறு­தி­வரை போரா­டு­வ­தும் விடா­மு­யற்­சி­யு­டன் செயல்­ப­டு­வ­தும்­தான் தமது பலம் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­பில் இ­ருந்து மீண்டு வந்­துள்ள தமன்­னா­வுக்­கு திரை­யு­ல­கில் இது 15வது ஆண்­டா­கும். மும்பை நாயகி­களில் நன்­றா­கத் தமிழ் பேசு­பவர்­கள் பட்­டி­ய­லில் இவ­ருக்­கும் நிச்­ச­யம் இட­முண்டு.

‘குயின்’ இந்­திப் படத்­தின் தெலுங்கு மறு­ப­திப்­பான ‘தட் மகா­லட்­சுமி’ படத்­தில் இவர்­தான் நாயகி. அது வெளி­யீடு காண தயா­ராக உள்ள நிலை­யில், கோபி சந்­து­டன் ‘சீட்­டி­மார்’, இந்­தி­யில் நவா­சு­தீன் சித்­திக்­கு­டன் ‘போல் சுடி­யான்’ என தமன்னா நடிப்­பில் பல படங்­கள் வெளி­யீடு காணத் தயா­ராகி வரு­கின்­றன. இந்­நி­லை­யில் தமி­ழில் இணை­யத் தொடர் ஒன்றி­லும் நடித்து வரு­கி­றார்.

“நடிக்­கத் தொடங்கி 15 ஆண்­டு­கள் ஆகி­விட்­டதை நினைக்­கும்­போது எனக்கே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. இத்­தனை ஆண்­டு­க­ளாக வேலை­யில் மட்­டுமே மூழ்கி இருந்­துள்­ளேன். அது­கு­றித்து மட்­டுமே சிந்­தித்­த­தால் மற்ற விஷ­யங்­களில் கவ­னம் சித­றி­ய­தில்லை.

“இருப்­பி­னும் விமா­னத்­தில் பறந்து பறந்து இடை­வி­டா­மல் நடித்­த­தில் மகிழ்ச்­சி­தான். படப்­பி­டிப்­பு­க­ளுக்கு மத்தி­யில் எனது வீட்டிற்கு ஒரு விருந்­தா­ளி­யைப் போல் வந்து சென்­றி­ருப்­ப­தாக இப்­போது நினைக்­கத் தோன்­று­கிறது. கொரோனா ஊர­டங்கு பல­வற்றை வெளிப் படுத்தி, நம்மை உண­ரச் செய்­தி­ருக்­கிறது,” என்கி­றார் தமன்னா.

இவ­ருக்கு வீட்­டி­லும் நண்­பர்­கள் மத்­தி­யி­லும் சில செல்­லப் பெயர்­கள் உள்­ளன. தம்மு, டின்ட்லி, டிமன்ட் ஆகி­யவை அவற்­றுள் சில. பள்­ளி­யில் படித்­த­போது வீட்டில் தம்மு என்று அழைத்­தார்­க­ளாம். டின்ட்லி, டிமென்ட் ஆகிய இரண்­டும் தமன்­னா­வின் தந்தை தன் மக­ளுக்கு வைத்த செல்­லப் பெயர்கள்.

வளர்ந்த பிறகு டேமி, டேம்ஸ் என்று நண்பர்­கள் அழைக்­கி­றார்­கள். இவற்­றுக்­கெல்­லாம் என்ன அர்த்­தம் என்­பது தமக்கோ அவ்­வாறு அழைப்­ப­வர்­க­ளுக்கோ தெரி­யாது என்­கி­றார் தமன்னா. எனி­னும் ‘தம்மு’ என்ற பெயர்­தான் இவ­ருக்­குப் பிடித்­த­மா­னது.

“யாரா­வது என்னை ‘தம்மு’ என்று அழைத்­தால் உடனே என் நினை­வு­கள் பின்­னோக்­கிச் சென்­று­வி­டும். பள்­ளிக்­கூட நாட்­கள் நினை­வுக்கு வரும். ஒரு வகை­யில் புத்­து­ணர்ச்­சி­யாக உணர்­வேன். இந்த ஊர­டங்­கின்­போது பழைய சம்­ப­வங்­களை எல்­லாம் நினைத்­துப் பார்த்­த­போது வாழ்க்கை எந்­த­ளவு மாறி­விட்­டது என்று சிலிர்த்­துப்போனேன்,” என்­கி­றார் தமன்னா.

ஓய்­வும் விடு­மு­றை­யும் கிடைத்­தால் வெளியே சுற்­றித் திரி­வ­தில் இவ­ருக்கு ஆர்­வ­மில்­லை­யாம். மாறாக வீட்­டில் நன்கு தூங்­கு­வ­தற்­கு­தான் விரும்­பு­வா­ராம்.

மேலும், இணையத் தளங்­களில் பழைய நடிகர், நடி­கை­க­ளின் பேட்­டி­கள் மற்­றும் அவர்­க­ளைப் பற்­றிய நிகழ்ச்­சி­க­ளைக் கண்டு ரசிப்பதும் தமன்­னா­வின் முக்­கி­யப் பொழு­து­போக்­கு­களில் ஒன்று. இது தவிர ஹாலி­வுட் திரைப்­ப­டங்­கள், சினிமா சம்­பந்­தப்­பட்ட, திரைக்­குப் பின்­னால் நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பை­யும் பார்த்து ரசிப்­ப­தில் இவ­ருக்கு விருப்­ப­ம் உள்­ளது.

“எதை­யும் ஒளி­வு­ம­றை­வு இன்றி பேசு­வ­து­தான் எனது பல­வீ­னம் என்று நினைக்­கி­றேன். எது­வாக இருந்­தா­லும் பட்­டென்று பேசி­வி­டு­வேன். அதே­ச­ம­யம் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வ­து­தான் எனது பலம். விடா­மு­யற்சி எனது உடன்­பி­றந்த குண­மாக அமைந்­து­விட்டது. அத­னால்­தான் கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்­ட­போது கூட நான் பயந்­து­வி­ட­வில்லை.

“பயம்­தான் நமது முதல் எதிரி. அதை எதிர்­கொள்­ளும் வரை எல்­லாமே பூதா­க­ர­மாகத் தெரி­யும். ஆனால், நேருக்கு நேர் சந்­தித்த பிறகு இதற்­கா­கவா பயந்­தோம்? என்று நினைக்­கத் தோன்­றும். கொரோ­னா­வுக்­குப் பிறகு சில விஷ­யங்­கள் குறித்து நல்ல புரி­தல் ஏற்­பட்­டுள்­ளது. எதற்­கா­க­வும் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை என்­பதை கொரோனா கிரு­மித்தொற்று உணர்த்தி உள்­ளது,” என்று குறிப்­பி­டும் தமன்னா, தாம் முன்­பை­விட தைரி­ய­மான பெண்­ணாக வலம் வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

ஊர­டங்­கின்­போது வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்து­வது, சமை­யல் செய்­வது என இவ­ரும் சக நடி­கை­க­ளைப் போல் நேரத்­தைச் செல­விட்­டுள்­ளார். அனைத்­தை­யும்­விட தன் தாயா­ரு­டன் அதிக நேரத்­தைச் செல­விட்­ட­தில் கூடுதல் மகிழ்ச்­சி­யை உணர்ந்­தா­ராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!