மாறன்: இரண்டு நாள்களில் நடக்கும் கதை

இரண்டு நாள்­களில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாக உரு­வா­கிறது 'கண்ணை நம்­பாதே'. மு. மாறன் இயக்­கு­கி­றார். உத­ய­நி­தி­யும் ஆத்­மி­கா­வும் இப்­ப­டத்­துக்­காக இணைந்­துள்­ள­னர்.

'ரோஜா­கூட்­டம்' ஸ்ரீகாந்த் முக்கி­ய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். மேலும் பிர­சன்னா, பூமிகா, வசுந்­தரா, கு.ஞான­சம்­பந்­தன் என பலர் முக்­கி­ய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

திகில், காதல் என்று பல அம்­சங்­க­ளு­டன் தயா­ரா­கிறது இப்­ப­டம். மு. மாறன் இதற்கு முன்பு 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' படம் மூலம் ரசி­கர்­க­ளின் கவ­னம் ஈர்த்­த­வர்.

"எனது முதல் படம் வெளி­யா­ன­துமே நண்­பர்­கள் பல­ரும் 'அருள்­நிதி படத்தை முடித்துவிட்­டீர்­கள். அடுத்து உத­ய­நிதி படமா' என்று விளை­யாட்­டாக கேட்­ட­னர். உண்­மை­யில் அப்­படி எந்­த­வொரு திட்­ட­மும் என்­னி­டத்­தில் இல்லை.

"முதல் படம் குற்­றப் பின்­னணி கொண்ட திகில் பட­மாக உரு­வா­னது. எனவே அடுத்து ஒரு காதல் படத்தை இயக்­க­வேண்­டும் என்று விரும்­பி­னேன். அப்­படி ஒரு கதை அமைந்­தது.

"அந்த நேரம் பார்த்து உத­ய­நிதி சாருக்­கும் அது பொருத்­த­மாக அமைய அவ­ரி­டம் கதை சொன்­னேன். அவரோ என்­னு­டைய முதல் படத்­தைப் பார்த்­த­தா­க­வும் அது பிடித்­துப்போன­தால் அதே­போன்ற ஒரு குற்­றப் பின்­னணி கொண்ட திகில் கதை­யில் நடிக்க விரும்­பு­வ­தா­க­வும் சொன்­னார்," என்­கி­றார் மு. மாறன்.

இதை­ய­டுத்து தனது குழு­வு­டன் அமர்ந்து மற்­றொரு கதை­யைத் தயார் செய்­தா­ராம். உத­ய­நிதி அதற்கு பச்­சைக்­கொடி காட்ட, அதே வேகத்­தோடு படப்­பி­டிப்பை நடத்தி முடித்­துள்­ள­னர். இன்­னும் இரு­பது விழுக்­காடு பணி­கள் மட்­டுமே மீதம் உள்­ள­ன­வாம்.

"கதைக்­குப் பொருத்­த­மாக 'கண்ணை நம்­பாதே' என்று தலைப்பு வைத்­தி­ருக்­கி­றோம். இரண்டு நாள்­களில் நடக்­கும் சம்­ப­வங்­கள்­தான் கதை. ஒவ்­வொரு காட்­சி­யும் விறு­வி­றுப்­பாக இருக்­கும்.

"எந்­த­வொரு திகில் கதை­யி­லும் சில குற்­றங்­கள் நடக்­கும். முக்­கி­ய­மான ஒரு முடிச்சு வைத்­தி­ருப்­பார்­கள். அந்த முடிச்சை மைய­மாக வைத்தே சில சம்­ப­வங்­களை, குற்றங்­களைக் காட்­சிப்­ப­டுத்தி இருப்­பார்­கள். இந்­தப் படத்­தில் யாருமே எதிர்­பார்க்­காத ஒரு முடிச்சு இருக்­கும். நான் தொட்­டி­ருக்­கும் விஷ­யம் படம் பார்ப்­ப­வர்­கள் எதிர்­பார்க்­காத ஒன்­றாக இருக்­கும்," என்­கி­றார் மாறன்.

சாம்.சி இப்­ப­டத்­துக்கு இசை­ அமைக்­கி­றார். 'பரி­யே­றும் பெரு­மாள்' ஸ்ரீதர் ஒளிப்­ப­திவு செய்­கி­றார். முழுப் படத்­தை­யும் சென்­னை­யில்­தான் பட­மாக்கி உள்­ள­னர். 35 நாட்­களில் 80 விழுக்­காடு படத்தை முடித்துவிட்­ட­ன­ராம். மேலும் பத்து நாட்­கள் படப்­பி­டிப்பை நடத்­தி­னால் மொத்த பட­மும் தயா­ரா­கி­வி­டும்.

"அருள்­நிதி, உத­ய­நிதி ஆகிய இரு­வ­ரி­ட­மும் மிகுந்த திறமை உள்­ளது. இரு­வ­ரு­ட­னும் இனி­மை­யான தரு­ணங்­கள் உள்­ளன. 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' படத்­தின் முதல் பிரதி தயா­ரா­ன­தும் அருள்­நிதி படத்­தைப் பார்த்­தார்.

"படம் முடிந்­த­தும் எது­வும் சொல்­லா­மல் கிளம்­பிச் சென்­று­விட்­டார். உண்­மை­யா­கவே நான் பயந்துவிட்­டேன். அவ­ருக்­குப் படம் பிடிக்­க­வில்­லையோ என்று நினைத்து குழம்பி நின்­றேன். ஆனால் இரவு அவ­ரி­டம் இருந்து தொலை­பேசி அழைப்பு வந்­தது.

"மகிழ்ச்­சி­யான குர­லில், 'படம் நான் எதிர்­பார்த்­தது போன்றே நன்­றாக வந்­தி­ருக்­கிறது. என்­னி­டம் சொன்­னது போலவே படத்தை எடுத்­தி­ருக்­கி­றீர்­கள். நாளை காலை சந்­திப்­போம்' என்­றார்.

"மறு­நாள் சந்­தித்­த­போது ஒரு லட்­சம் ரூபா­யைக் கையில் கொடுத்து எனக்­குப் பிடித்­த­மான இரு­சக்­கர வாக­னத்தை வாங்­கிக் கொள்­ளு­மாறு கூறி­னார்.

"உத­ய­நிதி சாரைப் பொறுத்­த­வரை மிக­வும் அன்­பா­ன­வர். மனி­த­நே­யம் மிக்­க­வர்; பிறர் நல­னி­லும் அக்­கறை கொண்­ட­வர். உதாரணத் திற்கு ஒரு சம்­ப­வம்.

இந்­தப் படத்­தில் மழை­யோடு சம்­பந்­தப்­பட்ட சில காட்­சி­கள் உள்­ளன. நாங்­கள் படப்­பி­டிப்பை நடத்­தி­ய­போது சென்­னை­யில் கோடைக் காலம். அங்கு தண்­ணீர் கஷ்­ட­மும் அதி­கம்.

"இந்­நி­லை­யில் உதய் சார் என்னை அழைத்­தார். 'மழைக்­காட்­சி­கள் எடுப்­ப­தாக சொல்­லி­யி­ருந்­தீர்­கள். சென்­னை­யில் ஏற்­கெ­னவே தண்­ணீர் பற்­றாக்­குறை நில­வு­கிறது. நாமும் இப்­படி தண்­ணீரை வீண­டித்­தால் அது சரி­யல்ல. ஒரு குடம் தண்­ணீ­ருக்கு மக்­கள் வரி­சை­யில் காத்­தி­ருக்­கி­றார்­கள். எனவே மழை சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை மாற்றி அமை­யுங்­கள்' என்­றார். "அவர் சொன்ன விஷயமும் அந்தப் பண்பும் எனக்குப் பிடித்திருந்தது. எனவே, அவசியமற்ற இடங்களில் மழையைத் தவிர்த்தேன்," என்கிறார் மாறன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!