‘மருத்துவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்’

கொரோனா பாதிக்­கப்­பட்­ட­வர்

களுக்கு சரி­யான சிகிச்சை அளிக்­க­வில்லை, தடுப்­பூசி மறுக்­கப்­ப­டு­கிறது என்­கிற கார­ணங்

களைச் சொல்லி மருத்­துவ

மனை­யில் உள்ள மருத்­து­வர், தாதியர்­களை தாக்­கும் சம்­ப­வங்­கள் ஆங்­காங்கே நடந்து வரு­கின்­றன. இந்த தாக்­கு­தல் குறித்து ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்­தூர் தன் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

“மருத்­து­வர்­கள், தாதியர்கள் தாக்­கப்­ப­டு­வது மன­வ­ருத்­தத்தை தரு­கிறது. அவர்­கள் தங்­கள் குடும்­பங்­களை மறந்து, தங்­க­ளுக்கு எந்த நேரத்­தி­லும் தொற்று ஏற்­ப­ட­லாம் என்­பதை அறிந்து உயி­ரைப் பண­யம் வைத்து பணி­யாற்­றி வருகிறார்கள். பாது­காக்­கப்­பட வேண்­டி­யர்­களைத் தாக்­கு­வது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. மருத்­து­வர்­கள் கட­வு­ளுக்கு சம­மா­ன­வர்­கள். அவர்­கள் பணி­க­ளை­யும் நாம் முழு­மை­யா­கப் புரிந்து கொண்­டால் இத்­த­கைய சம்­ப­வங்­கள் நடக்­காது.

“எனது தந்­தையை கொரோ­னாத் தொற்­றில் இருந்து அவர்­கள் காப்­பாற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.

“அதற்­காக அவர்­கள் பட்ட கஷ்­டத்­தை­யும் கடும் உழைப்­பை­யும் நான் அரு­கில் இருந்து பார்த்­தி­ருக்­கி­றேன். அவர்­க­ளுக்கு என்­றென்­றும் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்,” என்று அமைரா தஸ்தூர் பதி­விட்டு இருக்­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!