காந்த கண்ணழகியின் காதல் விவகாரம்

'காந்த கண்­ண­ழகி' என்ற பாடலை தமிழ்த் திரை­யு­ல­கி­னர் யாரும் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள். தன்­னு­டைய காந்த கண்­ணால் பல­ரை­யும் வளைத்­துப்போட்­ட­வர் அனு

இம்­மா­னு­வேல். இவ­ரும் தெலுங்கு

நடி­கர் அல்லு சிரி­சும் ரக­சி­ய­மாக காத­லித்து வரு­வது அம்­ப­ல­மாகி உள்­ளது.

அனு இம்­மா­னு­வேல் தமி­ழில் 'துப்­ப­றி­வா­ளன்' படத்­தில் விஷா­லு­ட­னும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னு­ட­னும் நடித்­தி­ருந்­தார். இந்­தப் படங்­க­ளுக்­குப் பிறகு இவர் தெலுங்கு, மலை­யா­ளப் படங்­களில் தொடர்ந்து நடித்து வரு­கி­றார்.

அல்லு சிரிஷ் தெலுங்­கில் இளம் நாய­க­னாக நடித்து வரு­கி­றார். மேலும் தமிழ், தெலுங்­கில் உரு­வான 'கவு­ர­வம்' என்ற படத்­தி­லும் நடித்­தி­ருக்­கி­றார். இவர் அல்லு அர்­ஜு­னின் தம்பி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அண்­மை­யில் அனு இம்­மா­னு­வேல் பிறந்த நாள் கொண்­டா­டி­னார். அப்­போது அனுவை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு காணொளி வெளி­யிட்­டார். அந்த காணொ­ளி­யில் இரு­வ­ரும் நெருக்­க­மாக இருக்கும் காட்சிகள் இருந்தன. அனுவை 'சைக்கோ' என்­று செல்­ல­மாக அழைத்து உள்­ளார். இந்­தக் காணொளி அவர்­கள் காதலை உறு­திப்­ப­டுத்தி இருப்­ப­தாக தெலுங்கு திரை­யு­லகம் கூறுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!