விருது வென்ற மலேசிய படம்

விருது வென்ற மலேசிய படம்

1 mins read

மலே­சிய திரைப்­ப­ட­மான 'என்­ன­வள்' டொரோன்டோ அனைத்­து­லக தமிழ் திரைப்­பட விழா­வில் விருது பெற்­றுள்­ளது. சிறந்த 'க்ரைம் த்ரில்­லர்' பட­மாக இது தேர்­வாகியுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளி­யான இப்­ப­டத்­தில், கும­ரே­சன், சங்­கீதா கிருஷ்­ண­சாமி ஆகிய இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

ஆண்­டு­தோ­றும் செப்­டம்­பர் மாதம் நடை­பெ­றும் டொரோன்டோ அனைத்­து­லக தமிழ் திரைப்­பட விழா­வில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட திரைப்­ப­டங்­களும் குறும்­ப­டங்­களும் திரை­யி­டப்­படும்.

நடு­வர் குழு­வில் தமிழ் திரை­யு­ல­கைச் சேர்ந்­த­வர்­களும் தமிழ் செய்­தி­யா­ளர்­களும் இடம்­பெற்­றி­ருப்­பர்.