குஷ்பு: பழைய ரஜினியை மீண்டும் திரையில் காண முடியும்

குஷ்பு: பழைய ரஜினியை மீண்டும் திரையில் காண முடியும்

1 mins read

'அண்­ணாத்த' படத்­தில் தமக்கு அழ­கான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ள­தாக குஷ்பு கூறியுள்ளார்.

அப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு பழைய நாள்­களை நினை­வூட்­டி­ய­தா­க­வும் 'அண்­ணா­மலை', 'படை­யப்பா', 'முத்து' உள்­ளிட்ட படங்­களில் பார்த்த பழைய ரஜி­னியை மீண்­டும் திரை­யில் பார்க்க முடி­யும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"ரஜினி சாரி­டம் பேசு­வ­தற்கு நானும் மீனா­வும் சற்று தயங்­கி­னோம். கார­ணம் நீண்ட காலத்­துக்­குப் பிறகு அவ­ரோடு நாங்­கள் பணி­பு­ரி­கி­றோம். எனவே அவர் எப்­ப­டிப் பேசு­வார் என்று எங்­க­ளுக்கு உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை.

"ஆனால், அவரே எங்­க­ளைத் தேடி வந்து பேசி­னார். அவர் மிக­வும் அன்­பா­ன­வர். 28 ஆண்­டு­களில் அவ­ரி­டம் எது­வும் மாற­வில்லை. அவர் இப்­போ­தும் முதல் நாள் பள்­ளிக்­குச் செல்­லும் சிறு­வ­னைப் போல கற்­றுக்­கொள்­ளும் ஆர்­வத்­து­டன் இருக்­கி­றார்," என்­கி­றார் குஷ்பு. ஒரு­முறை படப்­பி­டிப்­புக்கு ஐந்து நிமி­டம் தாம­த­மாக வந்­த­தற்­காக ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ட­மும் ரஜினி மன்­னிப்பு கேட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இப்­ப­ணி­வு­தான் அவரை உச்­சத்­துக்குக் கொண்டு சென்­றுள்­ளது எனக் கூறி­யுள்­ளார்.