பட்டங்கள் படுத்தும் பாடு

தமிழ் சினி­மா­வை­யும் சர்ச்­சை­க­ளை­யும் பிரித்­துப் பார்க்­கவே முடி­யாது. கோடம்­பாக்­கத்­தில் அண்­மைய சர்ச்­சைக்கு கார­ண­மாகி உள்­ளார் சூர்யா.

அண்­மை­யில் 'சூப்­பர் ஸ்டார்' என்ற அடை­மொ­ழி­யு­டன் ஊட­கங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட ஒரு செய்­திக்­கு­றிப்­பு­தான் பிரச்­சி­னைக்கு வித்­திட்­டுள்­ளது.

சூர்யா நடித்து வரும் புதிய படம் 'ஜெய் பீம்'. இப்­ப­டக்­கு­ழு­வி­னர் 'ஜெய் பீம்' குறித்த சில தக­வல்­க­ளு­டன் அந்த செய்­திக்­கு­றிப்பை அனுப்பி இருந்­த­னர். அதில்­தான், 'சூப்­பர் ஸ்டார்' சூர்யா என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, செய்­தி­யா­ளர்­கள் மத்­தி­யில் இந்த விஷ­யம் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்­டது. இது குறித்து 'தமிழ் முரசு' தொடர்பு கொண்­ட­போது பேசிய மூத்த செய்­தி­யா­ளர் ஆர்.எஸ்.அந்­த­ணன், சூர்­யா­வின் இந்த செயல்­பாட்டை ஏற்க முடி­யாது என்­றார்.

"ரஜி­னி­காந்த் இன்­னும் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரது படங்­க­ளுக்கு இன்­ற­ள­வும் வர­வேற்பு உள்­ளது. நூறு கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான தொகைக்கு அவ­ரது படங்­கள் வியா­பா­ரம் ஆகின்­றன. வசூ­லும் சிறப்­பாக உள்­ளது.

"ஒரு­வேளை சினி­மாவை விட்டு வில­கு­வ­தாக ரஜினி அறி­வித்­தால், அதன்­பி­றகு யார் 'சூப்­பர் ஸ்டார்' என்று போட்டி வைக்­க­லாம். அதற்கு முன்பு சூர்யா 'சூப்­பர் ஸ்டார்' பட்­டத்தை தனக்­குத்­தானே சூட்­டிக்­கொள்­வது நியா­யம் அல்ல," என்­கி­றார் ஆர்.எஸ்.அந்­த­ணன்.

ரஜி­னி­யின் தீவிர ரசி­க­ரான சோளிங்­கர் ரவி என்­ப­வர் பல ஆண்­டு­க­ளாக ரஜினி படங்­கள் வெளி­யா­கும்­போது, தன் சொந்த செல­வில் பதாகை வைப்­பது, சுவ­ரொட்டி அச்­ச­டித்து வெளி­யி­டு­வது என்று படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது வழக்­கம்.

அந்த வகை­யில், 'அண்­ணாத்த' படத்­துக்­கா­க­வும் பல லட்­சம் ரூபாய் செல­வில் விளம்­பர ஏற்­பா­டு­க­ளைச் செய்­கி­றா­ராம்.

"ரஜினி அர­சி­ய­லுக்கு வர­வில்லை என்­ற­தும், அவ­ருக்­காக செலவு செய்­த­வர்­கள் இனி காணா­மல் போய்­வி­டு­வார்­கள் என்­றெல்­லாம் பேசி­னார்­கள்.

ஆனால், சோளிங்­கர் ரவி போன்ற அதி­தீ­விர ரசி­கர்­கள் இன்­ற­ள­வும் ரஜி­னிக்­காக பெருந்­தொ­கையைச் செல­விட தயா­ராக உள்­ள­னர்.

"சூர்­யா­வுக்­குத் தெரி­யா­மல் இவ்­வாறு நிகழ்ந்­தி­ருக்­க­லாம் என்ற வாதத்தை ஏற்க இய­லாது. கார­ணம், 'ஜெய் பீம்' படத்­தின் தயா­ரிப்­பா­ள­ரும் அவர்­தான்.

"எனவே, அவ­ருக்­குத் தெரி­யா­மல் எந்­த­வோர் அறி­விப்­பை­யும் வெளி­யிடமாட்­டார்­கள்," என்­கி­றார் ஆர்.எஸ்.அந்­த­ணன்.

இது தொடர்­பாக சூர்யா ஏதே­னும் அறி­விப்பை வெளி­யி­டு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தனு­ஷுக்­குப் பட்­டம் சூட்­டும் செல்வா

இதற்­கி­டையே, தன் தம்பி தனுஷை வைத்து படம் இயக்கி வரும் இயக்­கு­நர் செல்வ ராக­வன் தனு­ஷுக்கு புதி­தாக பட்­டம் கொடுக்க தீர்­மா­னித்­துள்­ளா­ராம்.

புதுப்­ப­டத்­தின் தலைப்­புக் காட்­சி­யில் இந்­தப் பட்­டம் இடம்­பெ­றும் எனக் கூறப்­ப­டு­கிறது. அந்­தப் படத்­தின் தயா­ரிப்­பா­ளர் எஸ்.தாணு. அவர் ஏற்­கெ­னவே சில நடி­கர்­க­ளுக்­குப் பட்­டம் கொடுத்­த­வர். ஏற்­கெ­னவே இவ­ரது தயா­ரிப்­பில் தனுஷ் நடித்­துள்­ளார்.

எனவே, செல்­வ­ரா­க­வன் தேர்வு செய்­துள்ள பட்­டப்­பெ­யரை தாணுவை வைத்து அறி­விக்­கப் போகி­றார்­க­ளாம்.

தனுஷ் இது­வரை எந்­த­வி­தப் பட்­ட­மும் சூட்­டிக்­கொண்­ட­தில்லை. தமக்கு அதில் ஆர்­வம் இல்லை என்று நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் சொல்­கி­றா­ராம்.

பட்­டத்தை ஏற்க மறுத்த யோகி­பாபு

அண்­மை­யில், நடி­கர் யோகி­பா­புவை நாய­க­னாக வைத்து படம் தயா­ரிக்க உள்ள ஒரு­ த­ரப்­பி­னர், அவ­ருக்கு 'காமெடி சூப்­பர் ஸ்டார்' என்று பட்­டம் கொடுக்க விரும்­பு­வ­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

ஏற்­கெ­னவே சந்­தா­னத்­துக்­கும் இதே பட்­டத்தை கொடுக்க இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது.

அது குறித்து ரஜி­னி­யி­டம் கேட்­ட­போது, "தாரா­ள­மாக கொடுக்­கட்­டுமே... 'சூப்­பர் ஸ்டார்' பட்­டம் எனக்கு சொந்­த­மா­னது அல்ல" என்று ஒற்றை வரி­யில் முடித்­துக் கொண்­டார்.

இந்­நி­லை­யில், தனக்கு எந்த பட்­ட­மும் வேண்­டாம் என்று கூறி­விட்­டா­ராம் யோகி­பாபு.

ஆனால், ரஜினி ரசிகர்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பதிவிட்டு 'சூப்பர் ஸ்டார்' என்றால் அது ரஜினிதான் என்று முழங்கப் போகிறார்களாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!