ரஜினிகாந்த்: தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை

தமிழ் மக்­கள் இல்லை என்­றால் நான் இல்லை என்று நடி­கர் ரஜினி உருக்­கத்­து­டன் கூறி­யுள்­ளார்.

டெல்­லி­யில் நேற்று நடை­பெற்ற தேசிய திரைப்­பட விழா­வில், அவ­ருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்­கப்­பட்­டது.

இது இந்­தி­யத் திரை­யு­ல­கில் வழங்­கப்­படும் மிக உய­ரிய விரு­தா­கும். விருது விழா­வில் பேசிய ரஜினி, தம்மை திரைப்­பட நடி­க­ராக உரு­வாக்­கிய காலஞ்­சென்ற இயக்­கு­நர் பாலச்­சந்­த­ருக்கு விருதை அர்ப்­ப­ணிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"என்­னு­டன் பணி­பு­ரிந்த ஓட்­டு­நர் ராஜ்­ப­க­தூர்தான் எனது நடிப்­புத் திற­னைக் கண்­ட­றிந்து ஊக்­கு­வித்­தார். என்னை இந்தத் துறைக்கு கொண்டு வந்த அவ­ருக்கு நன்றி.

"அனைத்­தை­யும் கடந்து என்னை வாழவைக்­கும் தெய்­வங்­களான தமிழ் மக்­க­ளுக்கு நன்றி. தமிழ் மக்­கள் இல்லை என்­றால் நான் இல்லை," என்­றார் ரஜினி.

விருது பெற்ற அவ­ருக்குத் தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின், ஆளு­நர் ஆர்.என்.ரவி உள்­ளிட்ட பலர் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

தேசிய திரைப்­பட விழா­வில் பங்­கேற்ற துணை அதி­பர் வெங்­கையா நாயுடு அனைத்து கலை­ஞர்­களுக்கும் தன் கையால் விருது­களை வழங்­கி­னார்.

2019ஆம் ஆண்­டுக்­கான சிறந்த தமிழ்ப்­ப­ட­மாக வெற்­றி­மா­றன் இயக்­கிய 'அசு­ரன்' விருது பெற்­றது.

நடி­கர்­கள் மனோஜ் பாஜ்­பாய், தனுஷ் ஆகிய இரு­வ­ரும் முறையே இந்தி திரைப்­ப­டம் 'போன்ஸ்லே', தமிழ் திரைப்­ப­ட­மான 'அசு­ரன்' படத்­திற்­காக சிறந்த நடி­க­ருக்­கான விரு­தைப் பெற்­ற­னர்.

சிறந்த நடி­கைக்­கான விருது கங்­கனா ரணா­வத்­துக்கு வழங்­கப்­பட்­டது. 'மணி­கர்­னிகா: ஜான்சி ராணி', 'பங்கா' படங்­களில் அவர் சிறப்­பாக நடித்­தி­ருந்­தார்.

'விஸ்­வா­சம்' படத்­திற்­காக சிறந்த இசை­ய­மைப்­பா­ளர் விருது டி.இமா­னுக்கு வழங்­கப்­பட்­டது.

பார்த்­தி­பன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு அளவு 7' படத்­திற்கு நடு­வர்­க­ளின் சிறப்பு விருது வழங்­கப்­பட்­டது. இதே படத்­துக்­காக ரசூல் பூக்­குட்­டி சிறந்த ஒலிக்­க­ல­வைக்­கான விரு­தைப் பெற்­றார். நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!