‘துல்கரின் பணிவு வியக்க வைக்கிறது’

‘ஹே! சினா­மிகா’ படம் மூலம் இயக்­கு­ந­ராகி உள்­ளார் நடன அமைப்­பா­ளர் பிருந்தா.

மதன் கார்க்கி நாய­க­னா­க­வும் காஜல் அகர்­வால், அதிதி ராவ் ஆகிய இரு­வ­ரும் நாய­கி­களா­க­வும் நடித்­துள்ள இப்­ப­டம், விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.

“மனித வாழ்க்­கை­யில் உற­வு­கள் மிக முக்­கி­ய­மா­னவை. ஆனால், மனி­தன் அதை உணர்­வ­தில்லை. எந்த உற­வும் கையில் இருக்­கும்­போது அதன் அருமை தெரி­யாது. ஆனால், கைவிட்­டுப் போன­தும் தவிப்­போம். இது­கு­றித்து அல­சப் போகிறது இந்­தப் படம்,” என்­கி­றார் பிருந்தா.

அதற்­காக, இது நீதி­யைப் போதிக்­கும் படம் என்று கருத வேண்­டாம் என்­றும் அது தமது வேலை அல்ல என்­றும் கூறு­கிறார். இனி பிருந்தா பேசு­வ­தைக் கேட்­போம்.

“மதன் கார்க்கி இந்­தக் கதையை என்­னி­டம் கொண்டு வந்­தார். அவர் அதை அழ­காக விவ­ரிக்­கத் தொடங்­கி­ய­துமே என் மன­சுக்­குள் ஒரே ஒரு மனி­த­ரின் நினை­வு­தான் வந்­தது. அவர் துல்­கர் சல்­மான் தான்.

“இரண்டு கோபக்­கா­ரப் பெண்­க­ளின் ஊடாக ஓர் இளை­ஞன். அவ­னுக்கு நேரும் அனு­ப­வங்­கள் எல்­லாம் சுவா­ர­சி­ய­மாக இருக்­கும்.

“மதன் கார்க்கி இந்­தக் கதையை மிக நேர்த்­தி­யாக செதுக்கி உள்­ளார். ஒரு விஷ­யத்தை சொல்­லும்­போது நறுக்கு தெறித்­தார்போன்று மிக அள­வா­கச் சொல்ல வேண்­டும். அதை உணர்ந்து அரு­மை­யாக தன் எழுத்­தாற்­றலை வெளிப்­ப­டுத்தி உள்­ளார் கார்க்கி.

“இந்த கதைக்கு துல்­கர்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்­பது எனது எண்­ண­மாக இருந்­தது. திரை­யில் இந்­தக் கதையை மிக எளி­மை­யாக சொல்லி இருக்­கி­றேன். கதைக்­கேற்ற காட்சி அமைப்­பு­கள்­தான் இருக்­கும்.

“துல்­கர் சல்­மா­னைப் பார்த்து கதை சொன்­ன­போது, முழு­மை­யாக கேட்­ட­வர், ‘கண்­டிப்­பாக நாம் செய்­வோம்’ என்­றார். அவர் கொஞ்­சம்­கூட அப்­ப­ழுக்கு இல்­லாத ஆத்மா என­லாம்.

“வச­தி­யான வீட்­டுப் பிள்ளை. தந்தை மிகப்­பெ­ரிய நடி­கர். ஆனால், துல்­க­ரி­டம் அவ்­வ­ளவு பணிவு, தெளிவு. சொன்ன நேரத்­திற்கு வந்து நடித்து முடித்து அமை­தி­யாக கிளம்­பி­வி­டு­வார்.

“ஒரு வார்த்தை கூட குறை சொல்­லி­விட முடி­யா­த­படி நடந்­து­கொள்­வார். அந்­த­ளவு நிறை­கு­டம். எல்­லா­வற்­றி­லும் தனித்­துத் தெரி­கி­றார். திறம்­பட நடிக்­கி­றார்.

“இவ்­வ­ளவு சிறு வய­தில் அவ­ரி­டம் காணப்­படும் பக்­கு­வம் வியப்பை அளிக்­கிறது. என் படத்­தின் நாய­கன் என்­ப­தால் இப்­ப­டிச் சொல்­ல­வில்லை. மன­தார இந்­தப் பாராட்டை தெரி­விக்­கி­றேன்.

“துல்­கர் சல்­மா­னி­டம் பேசி­னால் ஒரு­சில நிமி­டங்­களில் அவ­ரு­டன் நெருக்­க­மா­கி­வி­டு­வோம். ஒரு சின்ன விஷ­யத்­தைக்கூட மிக அழ­காக மெரு­கேற்­றி­வி­டு­வார்.

“இந்­தப் படத்­தைப் பொறுத்­த­வரை அவர் மீது மொத்த சுமை­யை­யும் தூக்கி வைக்­க­வில்லை. ஆனால், அவ்­வாறு செய்­தா­லும் நிச்­ச­யம் தாங்­கிப் பிடிப்­பார்,” என்று மிகப் பெரிய பாராட்­டுச் சான்­றி­தழை வாசிக்­கி­றார் பிருந்தா.

இந்­தப் படத்­துக்­காக துல்­கர் சல்­மான் ஒரு பாட­லை­யும் பாடி­யுள்­ளார். அதற்கு இப்­போதே ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

கதா­நா­யகி அதிதி ராவ் பட உரு­வாக்­கத்­தில் வெகு­வாக உதவி செய்­தா­ராம்.

அவ­ரும் துல்­க­ரும் கச்­சி­த­மாக நடித்­த­தால் 62 நாள்­க­ளுக்கு திட்­ட­மிட்­டி­ருந்த படப்­பி­டிப்பை 42 நாள்­க­ளி­லேயே முடித்­து­விட இயன்­ற­தா­கச் சொல்­கி­றார்.

“இந்­தப் படமே அவர்­க­ளு­டைய அன்­பின் கொடை­தான் என்­பேன். இந்­தப் படத்­தில் நல்ல காதல் குறித்து சொல்லி இருக்­கி­றோம். ஒரு பெண்­ணின் ஆக அதி­க­மான கொதி­நிலை என்று சொல்­லக்­கூ­டிய மன­நி­லை­யைக்­கூட விவ­ரித்­தி­ருக்­கி­றோம்.

“காஜல் அகர்­வாலை பொறுத்­த­வரை இதற்கு முன்பு அவரை இப்­ப­டி­யொரு கதா­பாத்­தி­ரத்­தில் பார்த்­த­தில்லை என்று சொல்­லும் அள­வுக்கு வித்­தி­யா­ச­மான வேடத்­தில் நடித்­துள்­ளார். அவ­ருக்கு வெகு­கா­லம் முன்பே இது­போன்ற பாத்­தி­ரங்­க­ளைக் கொடுத்­தி­ருக்க வேண்­டும். அந்த அளவு அசத்­த­லாக நடித்­துள்­ளார்.

“அதிதி ராவ் குறித்து சொல்­லவே வேண்­டாம். என் குரு­நா­தர் மணி­ரத்­னம் படத்­தி­லேயே நடித்த அனு­ப­வம் உள்­ள­வர். அவ­ரது இயல்­பான நடிப்­புக்கு நானும் ஒரு ரசிகை. என் மீதுள்ள அன்­பின் கார­ண­மாக துல்­கர், அதிதி, காஜல் ஆகிய மூவ­ரும் இந்­தப் படத்­தில் நடித்­துள்­ள­னர். அதற்காக அவர்களுக்கு நன்றி,” என்­கி­றார் பிருந்தா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!