கதாபாத்திரத்துக்காக உடல் இளைத்த சிவா

அறி­முக இயக்­கு­நர் விக்­னேஷ் ஷா, மிர்ச்சி சிவா கூட்­ட­ணி­யில் உரு­வாகி வரு­கிறது 'சிங்­கிள் ஷங்­க­ரும் ஸ்மார்ட்­போன் சிம்­ர­னும்' படம்.

முதல்­தோற்­றச் சுவ­ரொட்­டி­யில் 'அகில உலக சூப்­பர் ஸ்டார் சிவா' என்று குறிப்­பிட்­டுள்­ள­னர். மேலும், குழந்­தை­க­ளின் மனம் கவர்ந்த ஹல்க், அயர்ன்­மேன் கதா­பாத்­தி­ரங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­தப் படத்­தில் சிவா 'டெலி­வரி பாய்' கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இதற்­காக உடல் எடை­யில் 12 கிலோ குறைத்­தா­ராம்.

"கொரோனா வேளையில் சிவாவைத் தொடர்­பு ­கொண்டு கதையை விவ­ரித்­தேன். முன்­ன­தாக, நேரில் வந்து கதை சொல்­லட்­டுமா என்று கேட்­ட­போது, 'பர­வா­யில்லை, தொலை­பே­சி­யில் கேட்­டாலே என்ன மாதி­ரி­யான கதை என்­பது புரிந்­து­வி­டும்' என்­றார்.

"முதன்­மு­றை­யாக தொலை­பேசி­யில் கதையை விவ­ரித்­த­தால் சற்று பதற்­ற­மாக உணர்ந்­தேன். அதே சம­யத்­தில் இந்த வாய்ப்­பைக் கைவி­ட­வும் மன­மில்லை.

"சிவாவை நேரில் சந்­திக்க தாம­த­மா­னால் அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்ற சற்றே காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தால் தொலை­பே­சி­யி­லேயே கதை­யைச் சொன்­னேன். அவ­ருக்கு கதை பிடித்­தி­ருந்­தது.

"கதா­பாத்­தி­ரத்­துக்­காக உடல் எடை குறைக்க வேண்­டும் என்­ற­தும் ஒப்­புக்­கொண்­டார். ஆனால், அவர் அப்­படி செய்­வாரா எனும் சந்­தே­கம் இருந்­தது. முதல் நாள் படப்­பி­டிப்­புக்கு வந்­த­போது, உண்­மை­யா­கவே 12 கிலோ எடை­யைக் குறைத்து அசத்­த­லாக காட்சி அளித்­தார்.

"அவர் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றால் கல­க­லப்­புக்­குப் பஞ்­சமே இருக்­காது. பதற்­றம், கோபத்­துக்கு இட­மி­ருக்­காது. அந்த அளவு ஜாலி­யாக இருப்­பார்.

"தின­மும் காலை­யில் அவர் வந்­த­தும் அன்­றைய தினம் எடுக்­கப்­பட இருக்­கும் காட்­சி­களை விவ­ரிப்­பேன். பொறு­மை­யாக அனைத்­தை­யும் கேட்­டுக்­கொண்டு, காட்­சி­யைப் பட­மாக்­கும்­போது தனது பாணி­யில் நடித்து மனம் கவர்­வார்.

"படத்­தலைப்­பில் வரும் 'சிங்­கிள்' சங்­கர் கதா­பாத்­தி­ரத்­துக்கு நியா­யம் செய்­தி­ருந்­தா­லும் வழக்­க­மான சிவா­வை­யும் திரை­யில் காணமுடி­யும்," என்­கி­றார் விக்­னேஷ் ஷா.

இந்­தப் படத்­தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரி­யன் என சிவா­வுக்கு இரண்டு நாய­கி­கள் உள்­ள­னர்.

மேகா­வின் கால்­ஷீட்­டுக்­காக அணு­கி­ய­போது, இப்­போது வாய்ப்பு இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­ட­தாம்.

அவ­ரது தாயா­ரு­டன் முன்பே அறி­மு­கம் இருந்­த­தால் நேரில் சென்று சந்­தித்­துள்­ளார் விக்­னேஷ். கதை­யைக் கேட்­டு­விட்டு முடிவு செய்­யு­மாறு கேட்­டுக்­கொண்­டா­ராம்.

அதன்­பி­றகு, மேகா­வும் அவ­ரது தாயா­ரும் கதை கேட்­ட­தை­யும் மிக நன்­றாக இருப்­ப­தா­கப் பாராட்டி நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தை­யும் விவரிக்­கத் தேவை­யில்லை.

அஞ்சு குரி­யன் தமி­ழில் அதி­கம் நடித்­தது இல்லை. மலை­யாள ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர். நாய­க­னின் தந்­தை­யாக பாடகர் மனோ, நண்­ப­ராக மா.கா.பா.ஆனந்த், விஜய் டிவி பாலா உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர்.

'ஓ மை கட­வுளே' திரைப்­ப­டத்­தில் அசத்­திய லியோன் ஜேம்ஸ்­தான் இசை­ய­மைத்­துள்­ளார்.

"என்­னு­டைய கதைக்­குப் பொறுத்­த­மான இசையை அவ­ரால் வழங்க முடி­யும் என நினைத்­தேன். எனது கணிப்பு வீண்­போ­க­வில்லை. படத்­தில் நான்கு பாடல்­கள் உள்­ளன. அவற்றை மேகா ஆகாஷ், அந்­தோ­ணி­தாஸ், லியோன் ஜேம்ஸ், பரத் ஆகி­யோர் பாடி­யுள்­ள­னர்.

"சாண்டி மாஸ்­டர் நட­னம் அமைத்­துள்ள 'சோறு­தான் முக்­கி­யம்' எனத் தொடங்­கும் பாடல் இளை­யர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் மிக அரு­மை­யாக உரு­வாகி உள்­ளது. படம் விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் விக்னேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!