நினைவாற்றல் குறைந்தது: கலங்கும் பானுப்பிரியா

நினை­வாற்­றல் குறைந்து அவ­திப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார் முன்­னாள் நடிகை பானுப்­பி­ரியா.

முக்­கி­ய­மான விஷ­யங்­களை மறந்­து­வி­டு­வ­தா­க­வும் தாம் கற்­றுக்­கொண்­ட­வற்­றைக்­கூட மறந்­து­ போவது வருத்­தம் அளிப்­ப­தா­வும் கூறு­கி­றார்.

பானுப்­பி­ரி­யா­வின் நிலையை அறிந்து திரை­யு­ல­கத்­தி­ன­ரும் அவ­ரது ரசி­கர்­களும் கவ­லை­யி­லும் சோகத்­தி­லும் ஆழ்ந்­துள்­ள­னர்.

கடந்த 1980களில் தமிழ்ச் சினிமா­வின் முன்­னணி கதா­நா­ய­கி­களில் ஒரு­வ­ராக வலம் வந்­த­வர் பானுப்­பி­ரியா. ரஜினி, கமல்­ஹா­சன், விஜ­ய­காந்த், சத்­ய­ராஜ், பாக்­ய­ராஜ் என அக்­கா­ல­க்கட்­டத்­தில் முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளாக இருந்த அனை­வ­ரு­ட­னும் இணைந்து நடித்­துள்­ளார்.

தமிழ் மட்­டு­மின்றி தெலுங்கு, இந்தி, கன்­ன­டம், மலை­யா­ளம் உள்­ளிட்ட பல்­வேறு மொழி­க­ளி­லும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்­ளார் பானுப்­பி­ரியா. அழ­கான கண்­க­ளைக் கொண்ட தென்­னிந்­திய கதா­நா­ய­கி­களில் இவ­ருக்­கும் இட­முண்டு. சிறந்த நட­னக் கலை­ஞ­ரும் ஆவார்.

கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவு­ஷல் என்­ப­வ­ரைத் திரு­ம­ணம் செய்­து­கொண்ட பானுப்­பி­ரியா திரை­யு­ல­கில் இருந்து விலகி இருந்­தார். நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு தமி­ழில் பாண்­டி­ராஜ் இயக்­கிய ‘கடைக்­குட்டி சிங்­கம்’, அசோக் செல்­வன் நடித்த ‘சில நேரங்­களில் சில மனி­தர்­கள்’ போன்ற படங்­களில் நடித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் மற­திப் பிரச்­சி­னை­யால் தவிப்­புக்கு ஆளாகி உள்­ளார் பானுப்­பி­ரியா.

“சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு என் கண­வ­ரைப் பிரிந்­து­விட்­ட­தாக ஒரு வதந்தி பர­வி­யது. அவர் இப்­போது உயி­ரு­டன் இல்­லா­த­தால் அது­கு­றித்­துப் பேச விரும்பவில்லை.

“மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு எனது உடல்­நிலை குறித்­தும் வதந்தி­கள் பர­வின. அவை உண்மை என்று நம்பி நடிகை ராதா பதறியடித்­துக் கொண்டு என்­னைத் தொடர்­பு­கொண்டு பேசி­னார். எனக்கு நட­னத்­தில் மிகுந்த ஈடு­பாடு உண்டு. ஆனால் வய­தான பின்­னர் நட­னத்­தி­லும் ஆர்­வம் குறைந்­து­விட்­டது. அண்­மை­யில் படப்­பி­டிப்­பின்­போது எனக்­கான வச­னங்­க­ளைக்­கூட மறந்­து­போ­னேன்,” என்று பானுப்­பி­ரியா தெரி­வித்­துள்­ளார்.

திரை­யு­ல­கில் உச்­சத்­தில் இருந்­த­போது பானுப்­பி­ரி­யா­வின் தனிப்­பட்ட வாழ்க்கை குறித்து அவ்­வப்­போது சில பர­ப­ரப்­பான செய்­தி­கள் வெளி­யா­கின. எனி­னும் அவை அனைத்­தும் வதந்தி­கள் என அவர் மறுப்பு தெரி­வித்­தார்.

ஆதர்ஷ், பானுப்­பி­ரியா தம்­ப­தி­யர்க்கு அபி­நயா என்ற மகள் உள்­ளார். இரு­பது வய­தான அபி­நயா லண்­ட­னில் உள்ள பல்­க­லைக்­கழகத்­தில் படித்­துக் கொண்­டி­ருப்ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!