‘நன்றிக்கடன் குறித்த படம்’

இயக்­கு­நர் முத்­தை­யா­வின் இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது ‘காதர்­பாட்சா என்ற முத்­து­ரா­ம­லிங்­கம்’. இது அவ­ரது எட்­டா­வது படம்.

நன்றி உணர்­வு உள்ள எந்த மனி­த­னும் தவறு செய்ய வாய்ப்பு இல்லை என்­ப­து­தான் கதைக்­கரு என்­கி­றார்.

படத்­தின் நாய­கன் ஆர்யா என்பதாலும் அவ­ரது வித்­தி­யா­ச­மான தோற்­றமும் படம் குறித்த எதிர்­பார்ப்பு­களை எகிற வைத்­துள்­ளது.

“எனது முந்­தைய படங்­களில் உணர்­வு­பூர்­வ­மான குடும்­பக் கதைக்­குள் சில அடி­த­டிச் சம்ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கும். ஆனால் இந்­தப் புதிய படத்­தில் ஒன்­பது பெரிய சண்­டைக் காட்­சி­களும் அவற்றுள் ஒரு குடும்­பக்­க­தை­யும் இடம்­பெற்­றி­ருக்­கும்,” என்­கி­றார் முத்தையா.

இப்­ப­டத்­தின் தலைப்பு கார­ண­மாக ஒரு சர்ச்சை வெடித்­துள்­ளது.

ராம­நா­த­பு­ரம் தொகுதி எம்­எல்­ஏ­வின் பெயரைத் தலைப்­பாக வைத்தி­ருப்­ப­தாக ஒரு தரப்­பி­னர் கூறி வரு­கின்­ற­னர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று படக்­குழு விளக்­கமளித்­துள்­ளது.

“பொது­வா­கவே என் படத்­துக்­கான தலைப்­பைச் சூட்­டும்­­போது, அது கதை­யைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் இருக்க வேண்­டும் என்று நினைப்­பேன். ‘குட்­டிப் புலி’ படத்­தில் இருந்து ‘காதர்­பாட்சா’ வரை அப்­ப­டித்­தான் இருக்­கும்.

“ஒரு குழந்­தைக்கு ஏனோ­தானோ என்று பெயர் சூட்­டு­வோமா? நமக்கு மிக­வும் பிடித்­த­மா­ன­வர்­கள் பெயரையோ, நண்­பர்­கள், என்றும் மான­சீ­கமாக நம் மன ­தில் நிலைத்து நிற்பவர்­க­ளின் பெயரையோ வைப்்போம்.

“காதலி பெய­ரையோ அல்லது காத­லன் பெய­ரை­யோ­த்தான் மக­னுக்கோ மக­ளுக்கோ வைக்க வேண்­டும் என்­கிற அவ­சி­யம் இல்லை. நல்ல நட்­பின் அடிப்­படை­யி­லும் இது சாத்­தி­யப்­படும். “ஒரு தாய் தன் நன்றி விசு­வா­சத்தை வெளிப்­ப­டுத்­தும் ­வி­த­மாகத் தன் மக­னுக்கு ‘காதர்­பாட்சா என்ற முத்­து­ரா­ம­லிங்­கம்’ என்று பெயர் சூட்­டு­கி­றார்.

“அப்­படி என்ன விசு­வா­சம்? அப்பெய­ரைச் சூட்டவேண்­டிய அவசி­ய­ம் என்ன? அந்த அம்­மா­வுக்­கும் அந்­தப் பெயர் உள்ள மற்­றொ­ரு­வ­ருக்­கும் இடையே உள்ள பந்­தம் என்ன? ஆகிய கேள்­வி­க­ளுக்­கான விடை­தான் இப்­ப­டத்­தின் முழு­மை­யான கதை,” என்­கி­றார் முத்­தையா.

கொரோனா நெருக்­கடி காலத்­தில் கன்­ன­டத்­தில் சிவ­ராஜ்­கு­மார் நடித்த ‘டகரு’ என்ற படத்­தைப் பார்த்­தா­ராம். அது பிடித்­துப்­போ­கவே, தமிழ் மொழி­மாற்­றத்­துக்­கான உரி­மையை வாங்கி உள்­ளார்.

“பிறகு அந்­தக் கதையைத் தமி­ழுக்கு ஏற்­ற­து­போல் மாற்றி அமைத்­தேன். அப்­போது தயா­ரிப்­பா­ளர் ஞான­வேல் ராஜாவை சந்­திக்­கும் வாய்ப்பு கிடைத்­தது.

“அந்­தச் சம­யத்­தில் அவர் ஆர்யா நடித்த ‘மகா­முனி’ படத்தை தயா­ரித்­துக்கொண்­டி­ருந்­தார். ஆர்­யாவை வைத்து ஒரு படம் இயக்­க­லாமே என்று அவர் கேட்­ட­போது, என்­னி­டம் தயார்நிலை­யில் இருந்த ‘டகரு’ படத்­தின் கதையை நான் செய்த மாற்­றங்­க­ளு­டன் விவ­ரித்­தேன். தயா­ரிப்­பா­ளர், நாய­கன் இரு­வ­ருக்­கும் கதை­ பி­டித்­துப் போகவே, உட­ன­டி­யாக வேலை­க­ளைத் தொடங்­கி­விட்­டோம்.

“ஆர்­யா­வைப் பொறுத்­த­வரை இயக்­கு­ந­ருக்கு ஏற்ற நடி­கர் என்று தயக்­க­மின்­றிச் சொல்­ல­லாம். நடிப்­பி­லும் உடல்­ந­லத்­தைப் பேணு­வ­தி­லும் அவர் ஒட்­டு­மொத்த திரை­யு­ல­கத்­துக்­கும் நல்ல முன்­னு­தா­ர­ணம் என்­பேன்.

“காலை­யில் ஆறு மணிக்கு நடைப்­ப­யிற்சி, பிறகு சைக்கிளிங் என்­று­தான் அவ­ரது நாள் தொடங்­கும். உல­கின் எந்த மூலை­யில் படப்­பி­டிப்பு நடந்­தா­லும், அவ­ரது இந்த அன்­றாட நடை­மு­றை­கள் மாற வாய்ப்­பில்லை.

“இந்­தப் படத்­துக்­காக அவர் தோற்­றத்தை மாற்­றிக் கொண்­ட­து­டன், வழக்­கம்­போல் முழு அர்ப்­ப­ணிப்­பு­டன் நடித்­துள்­ளார்.

“கதா­நா­யகி சித்தி இட்­னா­னிக்கு தமிழ் தெரி­யாது என்­றா­லும் தமிழ்ப் பெண்­ணின் சாயல் உள்­ளது. ஒரு கிரா­மத்­துக் கதைக்கு ஏற்ற நடிப்பை குறை­யின்றி அளித்­துள்­ளார்.

“சித்தி இட்னானி மும்பையைச் சேர்ந்தவர். ஆனால் அவரைத் திரையில் காணும்போது அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாகக் காட்சி அளிப்பார்.

“இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர் முத்தையா.

ஆர்யா

, : தமிழகத்  

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!