அனைவருக்கும் கிறிஸ்மஸ் குதூகலம்

கிறிஸ்மஸ் தினத்தை முன் னிட்டு ‘சன்லவ்’ இல்லங்களில் முதியவர்களுக்கும் சிறாருக்கும் சிறப்புக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தீவு முழுவதும் இருக்கும் ஐந்து ‘சன்லவ்’ இல்லங்களில், ஒவ்வொரு நிலையத்திற்கும் 200 பேர் என்று கிட்டத்தட்ட 1,000 பேர் இந்தக் கொண்டாட் டங்களில் பங்கேற்றனர். முதியோருக்கு ஏற்ற பாது காப்பான விளையாட்டுகளுடன் சிறார்கள் வண்ணம் தீட்டி மகிழப் போட்டிகளும் நடத்தப்பட் டன. அத்துடன் கிறிஸ்மஸ் ‘குக்கிஸ்’ வழங்குவது, பரிசு களைப் பரிமாறிக்கொள்வது, கிறிஸ்மஸ் தாத்தா வருகை அளித்தது போன்ற அங்கங் களும் கொண்டாட்டங்களில் இடம்பெற்றன. “கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டுக் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்குத் தொடர்ச் சியாக ஒவ்வொரு ‘சன்லவ்’ நிலையத்திலும் கொண்டாட்டங் கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தன. ஒரே விழாக்கோலமாக இருந்த கிறிஸ்மஸ் தினத்தை இல்லக் குடியிருப்பாளர்கள் மகிழ்ச் சியாக ஒன்றுகூடிக் கொண்டாட இது நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்றார் சன்லவ் இல்லத்தின் நிலைய நிர்வாகியான திருமதி தீப்பா மகேந்திரன், 29.