‘பல இன சமுதாயத்தில் புரிந்துணர்வு மிக முக்கியம்’

இந்தியர்களுடன் மற்ற இனத்தவர் களும் ஒரு சமய விழாவில் பங் கேற்பது வரவேற்கத்தக்கது என் றும் சமூகப் பிணைப்பை வலுப் படுத்த இது உதவியாக இருக்கும் என்றும் தொடர்பு, தகவல் அமைச் சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஸ்ரீ சிவன் கோயிலில் இம்மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற இவ்வாண் டின் மகா சிவராத்திரி கொண்டாட் டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு ஈஸ்வரன், “இந்து சமயத்தினருக்கு மகா சிவராத்திரி ஒரு முக்கியமான விழா. அதில் ஏராளமான மக்கள் பங்கேற்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 
“சிங்கப்பூர் ஒரு நவீன நகரம். இருந்தாலும் சிங்கப்பூரில் இந்து மக்கள் பெருமளவில் கூடி  மகா சிவராத்திரியைக் கொண்டாவது உண்மையிலேயே மகிழ்ச்சி தரு கிறது,” என்றார் அவர். 
தொடர்ந்து பேசிய அமைச்சர், “சிங்கப்பூர் பல இனத்தவர்களும் பல சமயத்தினரும் சேர்ந்த ஒரு சமுதாயம். இந்து பாரம்பரியத்தைப் பின்பற்றும் அதே நேரத்தில் மற்ற வர்களுக்குத் தொந்தரவு தராமல் இருப்பதும் புரிந்துணர்வை வளர்ப் பதும் முக்கியம்,” என்று வலியுறுத் தினார். 
அமைச்சர் ஈஸ்வரன் உட்பட சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் திரு ஐ கடே கூரா சுவா ஜயாவும் சிங்கப்பூருக்கான இந் தியத் தூதர் திரு ஜாவீத் அஷ் ரஃப்வும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களாகக் கலந்து கொண்டார்கள். 
இந்தோனீசியாவின் பாலி தீவி லிருந்து வரும் திரு சுவாஜயா இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என் பது குறிப்பிடத்தக்கது.    
“மகா சிவராத்திரி பாலியில் மட்டுமில்லாமல் இந்தோனீசியா முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. வழக்க மாக அவர்கள் கோயிலுக்கு அதி காலையில் சென்று பிரார்த்தனை களில் ஈடுபடுவார்கள். அதன் பின் வெவ்வேறு வழிபாடுகளிலும் பங்கேற்பார்கள்,” 

இம்மாதம் 4ஆம் தேதி கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் நடைபெற்ற மகா சிவ ராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (இடமிருந்து 2வது). இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர். ஜெயச்சந்திரனும் (இடக்கோடி), ஸ்ரீ சிவன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு வெங்கடேஷ் நாராயணசுவாமியும் (இடமிருந்து 4வது) உடன் உள்ளனர். படம்: த. கவி  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாய லேபார் ஆகாயப் படை தளத்தில் காணப்படும் மேஜர் ஆறுமுகம் சிவராஜ், 32. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Jun 2019

தேசிய தின அணிவகுப்பில் போர் விமானி மேஜர் ஆறுமுகம்

‘எ குட் ஸ்பேஸ்’ அமைப்பின் வகுப்பறையில் நடைபெறும் ஆங்கிலப் பாட வகுப்பை குமாரி அ.ஆர்த்தி, குமாரி வைஷ்ணவி நாயுடு (நடுவில்) ஆகியோர் வழிநடத்துகின்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வெங்கடேஷ்வரன், வுமன் ஆஃப் சக்தி

16 Jun 2019

சக்தி கொடுக்கும் ‘சக்தி’