துடிப்பான முதுமைக்காலத்தைக் கொண்டாடிய மூத்தோர் விளையாட்டு தினம்

துடிப்பான முதுமைக்காலத்தை ஊக்குவிக்கவும் பல தலைமுறையினரை ஒரே கூரையின்கீழ் கொண்டு வரவும் வருடாந்திர விளையாட்டு தினத்தை இம்மாதம் 4ஆம் தேதியன்று ‘சன்லவ்’ அமைப்பு கொண்டாடியது.  

‘சன்லவ்’ நிர்வாகத்தினர் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், 300க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்துகொண்டனர். 

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் வழிநடத்திய விளையாட்டுகளில் மூத்தோர் பங்கேற்று மகிழ்ந்தனர். ‘தலைசிறந்த உற்சாகமூட்டும் குழு’ என்ற போட்டியிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டினர். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடு படுவதுடன் சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் அதில் அடங்கியுள்ள இன்பத்தை உணரவும் இதுபோன்ற நிகழ்வுகள்  உதவும் என்று ‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீ ராஜமோகன் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“இயற்றமிழ் விருது” பெற்ற திரு பி.சிவசாமி (இடமிருந்து மூன்றாவது). படம்: திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்

13 Oct 2019

தனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா

திருமதி சு.சுப்புத்தாய் (இடது), திருமதி பத்மாவதி செல்லையா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Oct 2019

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முக்கியம்