இந்தியர்கள் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்

கடந்த 40 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 215 முறை ரத்த தானம் செய்துள்ளார் திரு சாம் லியோ சுப்பையா, 61.

1978ஆம் ஆண்டில் ஜூரோங் துறைமுகத்தில் நிகழ்ந்த ‘ஸ்பைரோஸ்’ என்ற கிரேக்கக் கப்பல் வெடிப்புச் சம்பவத்தில் 76 பேர் உயிரிழந்ததுடன் 69 பேர் காயமுற்றனர். அந்தச் சம்பவத்தின்போது தேசிய அளவில் ரத்த தான அழைப்பு விடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார் திரு சாம். விபத்து நேர்ந்த நேரத்தில் அவர் சிங்கப்பூர் கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

“முதன்முதலில் என் அண்ணனின் ஊக்குவிப்பால் 1977ஆம் ஆண்டு ரத்த தானம் செய்தேன். ‘ஸ்பைரோஸ்’ விபத்திலும் ரத்தம் வழங்கினேன். சிங்கப்பூரில் ரத்தத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து அன்றிலிருந்து தொடர்ச்சியாக ரத்த தானம் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்து வருகிறேன்,” என்றார் ஓய்வுபெற்ற சிங்கப்பூர் கடற்படை வீரரான திரு சாம்.

உலக ரத்த தான நாளை முன்னிட்டு, அதிகமாக ரத்த தானம் செய்த நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் விழாவில் கடந்த ஆண்டு ‘மெடல் ஆஃப் லைஃப்’ விருதை திரு சாம் பெற்றார்.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் தேசிய ரத்த திட்டம் ஏற்பாடு செய்யும் இந்த விழாவின் ஆக உயரிய விருது இது.

ஒவ்வொரு மணி நேரமும் 14 ரத்த பைகள் தேவைப்படும் சிங்கப்பூரில், ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 118,000 ரத்த பைகள் தேவைப்படுகின்றன.

சிங்கப்பூரில் வாழும் குடிமக்களில் ஏறத்தாழ 1.8 விழுக்காட்டினர் ரத்த நன்கொடையாளர்கள் என்றும் இந்த நன்கொடையாளர்களில் ஒரு விழுக்காட்டுக்கும் கீழ் உள்ளவர்கள், ‘ரிசஸ்-நெகட்டிவ்’ (rhesus-negative) ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.

இது குறித்து டான் டோக் செங் மருத்துவமனையில் ரத்தவியல் பிரிவில் (Haematology) மூத்த ஆலோசகராக இருக்கும் துணைப் பேராசிரியர் டாக்டர் பொன்னுத்துரை குபேரன், 66, தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பொதுவான நன்கொடையாளர்கள் (universal donors) என்றழைக்கப்படுபவர்கள், ‘ஓ நெகட்டிவ்’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களது ரத்தத்தைத் தானம் செய்யலாம் என்று அவர் கூறினார்.

“இந்தியர்களில் 6லிருந்து 7 விழுக்காட்டினர், ‘ரிசஸ்-நெகட்டிவ்’ ரத்த வகை உடையவர்கள். மற்ற இனத்தவர்களுடன் ஒப்பிடும்போது இது அதிகமே,” என்றார் டாக்டர் பொன்னுத்துரை.

காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் குமாரி சரண்யா கே சந்திரா, 27, ‘ஓ நெகட்டிவ்’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர். தொடக்கக் கல்லூரி முதல் ரத்தம் வழங்கி வருபவர் இவர்.

“ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறையாவது ரத்த தானம் செய்ய முயற்சி செய்வேன். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறப்புத் தன்மை என் ரத்தத்தில் இருப்பதால் அதை முடிந்த அளவிற்கு வழங்கி வருகிறேன்,” என்றார் குமாரி சரண்யா.

ரத்த தானம் செய்தால் உடல் எடை கூடிவிடும், சோர்வாகிவிடும், வலி அதிகமாக இருக்கும் போன்ற தவறான எண்ணங்கள் உட்பட ஊசிக்குப் பயப்படுவதும் ரத்த தானம் செய்யாமல் இருப்பதற்கு சிலர் கூறும் காரணங்கள் என்று குறிப்பிட்டார் திரு சாம்.

“இந்தியர்கள் இன்னும் அதிகமாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். நாம் தானமாக வழங்கும் ரத்தம், இன்னொரு மனிதரின் உயிரைக் காப்பற்ற உதவும் என்பதை நாம் உணர்ந்தால், பயத்தைக் கடந்து வந்துவிடுவோம்,” என்றார் திரு சாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!