வீட்டிலிருந்தபடியே காணக்கூடிய மேடை நாடகம்

சிங்கப்பூரின் முதல் இணையம் வழி நேரடியாகப் படைக்கப்பட்ட ‘எம் ஐ ஓல்ட்’ நகைச்சுவை நாடகத்தை இப்போது தமிழில் ‘அப்படி என்ன வயசாச்சு?’ என்ற தலைப்பில் தயாரிக்கவுள்ளார் மேடை நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், ஷாருல் சன்னா.

இந்த தமிழ் நாடகத்தில் உள்ளூர் பிரபலம் சஜினி நடிக்கிறார். இந்த நாடகம் ஓர் ஓய்வுபெற்ற 68 வயது பள்ளி ஆசிரியர் சாவித்ரி என்பவரை பற்றியது.

இவர் வயதான காலத்தில் தனது நேரத்தைக் கழிக்க முதல் முறையாக மேடை நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை படைக்க முயல்கிறார். இந்த முயற்சி எவ்வாறு உருவெடுக்கிறது என்பதுதான் நாடகத்தின் கரு.

ஒருவர் மட்டும் படைக்கும் இந்த நெடுமொழி நாடகக்காட்சி இதற்கு முன் மார்ச் மாதத் தொடக்கத்தில் அனைத்துலக மகளிர் தின வார இறுதியில், நாடக மையத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ அரங்கில் முதன்முதலில் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டது.

கொவிட் -19 தொடக்கத்திற்கு பிறகு இந்த நாடகத்தை ஏப்ரல் மாதம், அனைவரும் பயன்படுத்தும் ‘ஸூம்’ (Zoom) ஊடக சேவையின் வழி ஆறு முறை ஆங்கிலத்தில் நிகழ்த்தியுள்ளார் ஷாருல் சன்னா.

இந்த நாடகம் பெற்ற அபாரா வரவேற்பை அடுத்து இப்போது இதை தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரிக்கிறார்.

“எனக்கு தமிழ் தெரியாது. நான் ஆங்கிலத்தில் இயக்கி சஜினி தமிழில் வசனங்களை சொல்லி நடிப்பார். இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.

“அவ்வை சண்முகி எனும் திரைப்படத்தில் வரும் சண்முகி என்ற கதாபாத்திரத்தை போல் இந்த சாவித்ரி கதாபாத்திரம் சித்திரிக்கப்படவேண்டும் என்று விரும்பினேன்,” என்று தெரிவித்தார் ஷாருல்.

முழுநேர தொலைக்காட்சிக் கலைஞரான சஜினி, இதுபோன்ற நாடகங்களில் நடிப்பது தமக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது என்று கூறினார். நாடகத்திற்கான ஒத்திகைகள் அனைத்தும் இணையம் வழி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“முதல் முறையாக சொந்தமாக வசனத்தை எழுதி, இந்த நெடுமொழி நாடகக்காட்சியை படைக்கவுள்ளேன். ஷாருல் இயக்க, நான் வசனங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதும் புதிய வசனங்களை எழுதுவதும் சவால்மிக்க ஒன்றாக இருந்தன,” என்றார் சஜினி.

இந்த நாடகத்தின் தமிழாக்கம், ஜூன் 24ஆம் தேதி படைக்கப்படவிருக்கிறது. இந்த நாடகத்தை காண விரும்புவோர் ‘இவென்ட்பிரைட்’ (Eventbrite) என்ற இணையத்தளத்திற்கு சென்று நன்கொடையைச் செலுத்தி நாடகத்தைக் காண அனுமதி பெறலாம்.

‘அவேர்’ என்ற குழுவுடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்த நாடகத்தின் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தும் பாலின சமத்துவத்திற்காக வாதிடும் அக்குழுவை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!