அம்மாவின் கைப்பக்குவத்தை உலகமயமாக்கும் முயற்சியில் நஜிரா

கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக சமோசா வியாபாரம் செய்து வரும் பொருளியல் துறை பட்டதாரியான குமாரி நஜிரா ரொஸ்னி, 26, இவ்வாண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிட வசதியாக சிற்றுணவகம் ஒன்றைத் திறக்கவும் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் திட்டங்கள் கொண்டுள்ளார்.

சிறு வயதிலிருந்தே சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்பதே இவரது விருப்பம். சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தும் தொழில் தொடங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. என்யுஎஸ், பொருளியில் பள்ளியில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தவர், அம்மா வீட்டிலிருந்தே செய்து வந்த சிறிய வர்த்தகத்தில் உதவத் தொடங்கினார்.

அம்மா திருமதி நூருல் அயினின் உழைப்பு, நஜிராவின் ஆர்வம் இரண்டும் இணைந்து சில மாதங்களிலேயே வாடிக்கையாளர்கள் பெருகினர். வேலையுடன் வியா பாரத்தையும் கவனிக்கத் திணறிய இவர், ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு சமோசா வர்த்தகத்தில் முழு மூச்சாக இறங்கினார்.
உறவினர்கள், நண்பர்கள், பள்ளி வாசல் நிகழ்ச்சிகள் என்று சிறிதளவில் சமோசா சமைத்து விற்று வந்தார் திருமதி நூருல்.
இறைச்சி, கோழி, காய்கறி என மூன்று வகையான சமோசாக்களை அவர் செய்வார். அவரின் சமோசாக்கள் நல்ல ருசி, தரமானவை.
ஏறக்குறைய 10 ஆண்டுகளாக சமோசா செய்து வரும் திருமதி நூருல், சமோசா செய்வதில் தனித்தன்மையான ஒரு பக்குவத்தை உருவாக்கியுள்ளார்.

அம்மாவின் கைப்பக்குவத்தை மூலதனமாகக் கொண்டு, வீட்டுத் தொழிலை புத்தாக்கமிக்க, நிபுணத்துவ வர்த்தகமாக மாற்றி அமைக்க நினைத்த நஜிரா, டுரியான், பட்டர் சிக்கன், ஆப்பிள் கிரம்பல், மட்டர் பன்னீர் என வகைவகையான சமோசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தியர்கள், சீனர்கள் என எல்லா இனத்தவரும் இத்தகைய சமோசாக்களை விரும்பி வாங்குவதாக இவர் குறிப்பிட்டார்.
‘ஹவஸ் ஆஃப் சமோசாஸ்’ என்ற நஜிராவின் கடை ஏறக்குறைய மூன்றாண்டுகளாக செயிண்ட ஜார்ஜஸ் ரோட்டில் இயங்குகிறது. நஜிரா நிர்வாகத்தையும் திருமதி நூருல் உட்பட மூன்று சமையல்காரர்கள் சமோசா தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

“சின்ன வயதிலேயே நஜிரா சொந்தக் கடை நடத்தவேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். அவரின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு ஆதரவளித்தேன். எனினும் முதலில் படிக்க சொன்னேன். அதன்பிறகு அவர்களின் விருப்பப் படி செயல்பட சுதந்திரம் தந்தேன்,” என்றார் திருமதி நூருல், 53.
“வழக்கமான சமோசா விற்கும் பல கடைகள் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ளன. அதிலிருந்து வேறுபட்ட நினைத்தேன். பலவித சுவைகளில் சமோசாக்களைத் தருவித்து ஆய்வு செய்கிறோம். விழாக் காலங்களில் புதுமையான வகைகளை வழங்க முனைகிறோம். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ‘டர்க்கி-கிரான்பெரி’ சுவையை அறிமுகப்படுத்தினோம். சீனப் புத்தாண்டிற்கு ‘மாலா ஏபிலோன்’, ‘பைனாப்பிள் டார்ட்’, ‘நியான் கௌ’ ஆகிய வகைகளை உருவாக்கியுள்ளோம்,” என்றார் நஜிரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!