இந்திய, சீன கலாசாரங்களை இணைக்கும் கலைப் படைப்பு

சிங்­கப்­பூர் சீன கலா­சார நிலை­யம் வழி­ந­டத்­தும் ‘மூ மூ பார்க்’ என்ற கலைக் கண்­காட்­சி­யில் குமாரி மித்ரா ஜீவா­னந்­த­னின் கலைப் படைப்பு ஒன்­றும் இடம்­பெ­று­கிறது.

எருது ஆண்­டாக கரு­தப்­படும் சீனப் புத்­தாண்டை மைய­மா­கக் கொண்­டுள்ள இந்­தக் கண்­காட்­சி­யில் மித்ரா தயா­ரித்­துள்ள ‘டோரஸ் ஃபாரஸ்ட்’ என்ற மின்­னி­யல் விளக்­கப்­ப­ட­மும் இடம்­பெறு­கிறது. மித்ரா உட்­பட மொத்தம் எட்­டுக் கலை­ஞர்­க­ளின் படைப்பு­கள் கண்­காட்­சி­யில் இடம்­பெறு­கின்­றன.

இந்­திய கலா­சார அம்­சங்­களைக் கொண்ட தமது விளக்­கப்­ப­டம் மற்ற கலைப் படைப்­பு­களி­லி­ருந்து வேறு­ப­டு­கிறது என்று குறிப்­பிட்­டார் மித்ரா, 26.

“பூக்­கள் உள்­ளிட்ட அலங்­காரப் பொருட்­க­ளைக் கொண்டு மாடு­களைக் கௌர­விப்­பது இந்­திய கலா­சா­ரத்­தில் ஓர் அங்­கம். அத­னால் எனது படைப்­பில் பூக்­கள், பல வண்ண நிறங்­கள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கி­யுள்­ளேன்.

“ஆசி­யா­வைச் சேர்ந்த பச்­சைக்­குத்­தும் வடி­வ­மைப்­பு­க­ளை­யும் எனது படைப்­பில் உள்­ள­டக்­கி­யுள்­ளேன். இயற்­கை­யு­டன் ஒத்­து­வா­ழும் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி பார்­வை­யா­ளர்­களைச் சிந்­திக்க வைப்­ப­து­டன் பல­வகை உயி­ரி­னங்­கள் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தும் எனது விளக்­கப்­ப­டத்­தின் முக்­கிய நோக்­கம்,” என்­றார் மித்ரா.

உல­கத்­தில் இயற்கை வளங்­கள் குறைந்து வரும் வேளை­யில் இயற்­கை­யைப் பாது­காக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் இவ­ரது படைப்பு வலி­யு­றுத்­து­கிறது.

மித்­ரா­வின் விளக்கப்­ப­டத்­திற்­கு­ரிய ‘கியூ­ஆர்’ குறி­யீட்டை ‘ஸ்கேன்’ செய்­தால் ஒரு கான­கத்­தில் எருது ஒன்று கண்­ணில் புலப்­படும் காட்­சி­யைப் பார்க்­க­லாம்.

கான­கத்­தின் காப்­பா­ள­ராக எரு­தைச் சித்­தி­ரிக்­கும் நோக்­கில் இந்­தக் காட்சி அமைக்­கப்­பட்­டது என்று மித்ரா தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்­டில் லசால் கலைக் கல்­லூ­ரி­யி­லி­ருந்து நுண்­கலைத் துறை­யில் பட்­டம் பெற்ற மித்ரா தற்­போது தன்­னு­ரிமை விளக்­கப்­ப­டக் கலை­ஞ­ராக இருக்­கி­றார்.

மரினா ஒன் பகு­தி­யில் அமைந்­தி­ருக்­கும் ஃபேஸ்புக் வளா­கத்­தில் சுவர் விளக்­கப்­ப­டம் தயா­ரித்­த­தும் இவ்­வாண்­டின் ‘ஆர்ட் வாக் லிட்டில் இந்­தியா’ நிகழ்ச்­சி­யில் கலை­ஞ­ராக ஈடு­பட்­ட­தும் மித்­ரா­வின் முக்­கிய பணி­களில் சில.

சிங்­கப்­பூர் சீன கலா­சார நிலை­ய­மும் ‘தி மெஷ்­மைன்ட்ஸ்’ அற­நிறு­வ­ன­மும் இணைந்து நடத்­தும் ‘மூ மூ பார்க்’ கண்­காட்சி ஜன­வரி 22ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை நீடிக்­கும்.

வாக­னத்­தில் இருந்­த­வாறு இந்த ‘டிரைவ்-துரு’ கண்­காட்­சி­யைக் காண­லாம். இந்­தக் கண்­காட்சி ஆசி­யா­வி­லேயே முதல்­மு­றை­யாக நடத்­தப்­ப­டு­வது குறிப்­பிடத்­தக்­கது. முப்­ப­ரி­மாண கலைப் படைப்­பு­களைக் கொண்­டுள்ள இந்தக் கண்­காட்­சியை நடந்­து­சென்று பார்ப்­பதற்­கான கட்­ட­ணம் $5. மின்­சார காரில் சென்­ற­படி பார்க்க $10 கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டும்.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூர் சீன கலா­சார நிலை­யத்­தில் இரு­ப­ரி­மாண வடி­வத்­தி­லான இதே கலைப் படைப்­பு­க­ளைப் பொது­மக்­கள் இல­வ­ச­மாக பார்க்­க­லாம்.

கண்­காட்சி குறித்த மேல்­விவரங்­க­ளுக்கு singaporeccc.org.sg/moo-moo-park/ எனும் இணை­யப்­பக்­கத்­திற்­குச் செல்­ல­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!