சிங்கப்பூரின் ஆகப் பெரிய தமிழ் எழுத்து கோலம் சாதனை

ஆகப் பெரிய தமிழ் எழுத்து கோலம் வரைந்­த­தற்காக சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் மே 1ஆம் தேதி அன்று இடம்­பெற்­றார் 62 வயது ரங்­கோலி கலை­ஞர் திரு­மதி விஜ­ய­லட்­சுமி மோகன்.

கிட்­டத்­தட்ட 55 ஆண்டு கால­மாக ரங்­கோலி வரைந்து வரும் இவர், சிங்­கப்­பூர் சாத­னைப் புத்­தக்­கத்­தில் 35ஆம் முறை­யாக இடம்­பெ­று­கி­றார். தமிழ் எழுத்­துக்­கள் 5.8 X 3.0 மீட்­டர் அள­வி­லும் மொத்த கோலம் 7.2 X 4.4 மீட்­டர் அள­வி­லும் அமைக்­கப்­பட்­டன.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் 20ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த கோலத்தை உரு­வாக்­கி­ய­தாக குறிப்­பிட்­டார் விஜ­ய­லட்­சுமி.

தமிழ் மொழி மாதத்­தில் ரங்­கோலி வரை­வ­தைப் பற்றி சொல்­லிக் கொடுக்க விஜ­ய­லட்­சுமி நான்கு பயி­ல­ரங்­கு­கள் நடத்­தி­னார்.

பயி­ல­ரங்­கு­களில் பங்­கேற்ற 24 பேரு­டன் சிங்­கப்­பூர் பெண்­கள் சங்­கத்­தின் எட்டு உறுப்­பி­னர்­கள் இணைந்து கோலத்தை உரு­வாக்க கைகொ­டுத்­த­னர்.

“பயி­ல­ரங்­கு­கள் மூலம் பல இன மக்­க­ளுக்கு ரங்­கோலி கலை­யைப் பற்றி கற்று தந்­தேன். தமி­ழர் பண்­பாட்­டைப் பல இன மக்­க­ளிடம் பகிர்­வ­தற்கு இது ஒரு நல்ல வாய்ப்­பாக அமைந்­தது. வருங்­கால சந்­ததி­யி­ன­ருக்கு நினை­வில் நிற்­ப­தற்காக இந்த கோலப் படைப்பை பிரம்­மாண்­ட­மாக வரைந்­தேன்,” என்­றார் விஜ­ய­லட்­சுமி.

படம்: விஜ­ய­லட்­சுமி மோகன்

செய்தி: எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!