தடை தாண்டி தடம் பதித்தவர்

இரண்டு மகள்­க­ளுக்கு தாயா­ரும் முது­க­லைப் பட்­ட­தா­ரி­யு­மான திரு­வாட்டி கங்­கா­தேவி ரௌண்­டன் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் 14 ஆண்­டு­க­ளாக சேவையாற்றி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை, படிப்புக்கு இடையே 34 வயது கங்­கா­தேவி வேலை­யிலும் தடம் பதித்து வரு­கி­றார்.

23ஆம் ‘ரோட்டா’ தள­பதி பயிற்­சித்­திட்­டத்­தில் பங்­கு­பெற்ற அவர் கடந்த ஜுன் 30ஆம் தேதி ‘ரோட்டா’ தள­ப­தி­யாக பத­வி­யேற்­றார்.

பயிற்சிவகுப்பில் ஆக மூத்தவராக இருந்­தா­லும் வய­தைத் தடை­யாகப் பார்க்­கா­மல் கடும் முயற்சி எடுத்து உழைத்­தார் கங்கா ­தேவி.

பயிற்சித்திட்டத்தின் கல்விப் பிரி­வில் ஆகச் சிறப்­பாக விளங்கி­ய­ தற்­கான விரு­தைப் பெற்­றிருப்பது அதற்கான பலன். குடி­மைத் தற்­காப்பு படை­யில் நீண்­ட­கா­லம் பணி­யாற்­றிய அனு­ப­வம் கைகொ­டுத்­தது என்று குறிப்­பிட்­டார் கங்­கா­தேவி.

“என்­னு­டன் பயிற்­சித்­திட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­வர்­கள் பெரும்­பா­லும் 20களில் இருந்­த­னர். முழு நேர தேசிய சேவை­யா­ளர்­களும் 20 வய­துக்­குள் இருந்­த­னர். அவர்­க­ளு­டன் போட்­டி போட்டு உடற்­ ப­யிற்சி, படிப்பு ஆகி­ய­வற்­றில் ஈடு­படு­வ­தற்கு அதிக சகிப்புத்தன்மை தேவை­ப் பட்டது.”

“பயிற்­சித்­திட்­டத்­திற்கு வரு­வ­தற்கு முன் கொஞ்­சம் பயந்­தேன். இரண்டு பிள்­ளை­க­ளுக்கு அம்­மா­வான நான் எப்­படி அவர்­க­ளு­டன் ஓடி ஆடி பயிற்சி செய்­ய­ப்போ­கி­றேன் என்ற அச்­சம் இருந்­தது,” என்­று கங்­கா­தேவி கூறினார்.

பயிற்­சித்­ திட்­டத்­தில் நிறைய நண்­பர்­கள் உரு­வா­ன­தும் மேல் அதி­கா­ரி­கள் நன்கு ஊக்­கம் தந்­த­தும் பயிற்­சி சுமூ­க­மாக நிறை­வ­டை­ய வழி­வ­குத்­தது என்றார் அவர்.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொது நிர்­வா­கத் துறை­யில் முது­க­லைப் பட்­டத்­தைப் பெற்­றார் கங்­கா­தேவி.

பிடி­வாதமும் விரும்­பி­யதை அடைவ­தற்கு அரும்­பா­டுப­டும் குணமும் தமது சிறுவய­தி­லி­ருந்தே­ உடனிருப்பதாக அவர் குறிப்­பிட்­டார்.

கண­வர், தாயார், அக்கா என்று குடும்ப உறுப்­பி­னர்­கள் தந்த ஆத­ர­வும் பணி­யில் சிறக்க உத­வி­யது என்­றார் கங்­கா­தேவி.

“நல்ல புரிந்­து­ணர்வு உள்ள கண­வர் இருக்­கி­றார். என் முதல் பிள்ளை பிறந்­த­போது என் பட்­டப்­ப­டிப்­பில் அது ஒரு முக்­கிய ஆண்டு. சம்­ப­ளம் இல்­லாத விடுப்பு எடுத்து என் தாயார் வீட்­டில் இருந்து பிள்­ளையை பரா­ம­ரித்­தார். என் குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் என் இலக்கை அடை­வ­தில் பங்கு வகித்­த­னர்,” என அவர் கூறினார்.

குடி­மைத் தற்­காப்பு படை­யின் ‘ஹேஸ்­மேட்’ (Hazmat), கடல்­துறை தீய­ணைப்பு ஆகிய இரண்டு துறை­களில் நிபு­ணத்­து­வம் பெற்ற அவர், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக் கழ­கத்­தில் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் பணி­யாற்­றி­யுள்­ளார்.

குடி­மைத் தற்­காப்பு படை­யில் சேர்ந்த முதல் சில ஆண்­டு­களில் ஈசூன் தீய­ணைப்பு நிலை­யத்­தில் பணி­யாற்­றி­ய­போது மன­தில் நிற்­கும் ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக நினை­வுகூர்ந்­தார் கங்­கா­தேவி.

“ஈசூன் வீடு ஒன்­றில் கொடூ­ர­மான தீ சம்­ப­வம் நிகழ்ந்­தது. ஒரு பிள்­ளை­யும் அம்­மா­வும். சன்னல் வெளியே, காற்றுக் குளிர்வசதிப் பெட்­டிக்கு அரு­கில் இருந்த குறுகலான சட்டத்தில் நின்­று­கொண்­டி­ருந்­த­னர். நானும் என் குழு­வும் அந்த பிள்­ளை­யை­யும் அம்­மா­வை­யும் காப்­பாற்­றி­னோம். அது நான் பணி­யாற்­றிய முதல் பெரிய தீச் சம்­ப­வங்­களில் ஒன்று,” என்­றார் கங்­கா­தேவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!