கண்காட்சிவழி பாரம்பரிய நடனங்களின் மரபும் மாற்றமும்

இந்து இளங்­கோ­வன்

 

பாரம்­ப­ரிய கலை­களில் தூய்­மை­யான வடி­வம் என ஒன்­றும் இல்லை, அவை உண்­மை­யான சாரத்தை இழக்­கா­மல் காலத்­துக்­குத் தகுந்­த­வாறு வளர்­வ­தா­க­வும் மாற்­றம் காண்­ப­தா­க­வும் கூறு­கி­றார் கலா ்­சா­ரப் பதக்­கம் பெற்ற நட­னக் கலை முன்­னோ­டி­யான திரு­மதி சாந்தா பாஸ்­கர்.

பர­த­நாட்­டி­யம் போன்ற பாரம்­ப­ரிய நடன வடி­வங்­கள் நேரத்­துக்­கும் இடத்­துக்­கும் ஏற்ப மாறும் தன்­மை­யைக் கொண்­டுள்­ள­போ­தும் முக்­கி­ய­மான மர­பு­க­ளை­யும் பண்­பு­ க­ளை­யும் தொடர்ந்து பேணிக் காப்­பது அவ­சி­யம் என்­பது 'ரூட்ஸ்' (ROUTES) என்ற கண்­காட்­சி­யில் இடம்­பெ­றும் ஆறு முன்­னோ­டிக் கலை­ஞர்­கள் முன்­வைத்த கருத்­தா­கும். அவர்களில் திருமதி சாந்தா பாஸ்கரும் ஒருவர்.

சிங்கப்பூரின் பல்வேறு பாரம்­ப­ரிய நட­னக் கலை­களின் வேர்கள், அவை கடந்து வந்த பாதை­கள், மின்­னி­லக்­கம் சூழ்ந்த காலத்தில் அவற்றின் நிலை, கிரு­மித்­தொற்று உரு­வாக்­கிய சவால்­க­ளுக்கு மத்­தி ­யில் அவை தொடர்ந்து வளர்ந்து வரும் விதம் எனப் பல அம்­சங்­களை முப்­ப­ரி­மாண அனு­ப­வக் கண்­காட்­சி­யாக உரு­வாக்­கி­யுள்­ளது தேசிய கலைகள் மன்­றம்.

ஸ்டாம்­ஃபோர்ட் கலை­கள் நிலை­யத்­தில் நடை­பெ­றும் ரூட்ஸ் கண்­காட்சி, செப்­டம்­பர் 12ஆம் தேதி வரை பொது­மக்­க­ளின் பார்­வைக்கு திறந்­தி­ருக்­கும்.

முப்­ப­ரி­மா­ணப் படிம (ஹோலோ­கி­ராஃ­பிக்) தொழில்­நுட்ப உத­வி­யோடு கண்­காட்சி வடி­வம் பெற்­றுள்­ளது. பார்­வை­யா­ளர்­கள் தனிப்­பட்ட இருக்­கை­களில் வலைக்கம்பித் திரை­ையச் சுற்றி அமர்ந்­தி­ருப்­பர்.

கலை­ஞர்­கள் பார்­வை­யா­ளர்­களுக்கு மத்­தி­யில் அமர்ந்து நேர்­கா­ணல் செய்­யப்­ப­டு­வது போன்ற உணர்வைத் தரு­கிறது இந்த கண்­காட்சி.

கிரு­மித்­தொற்றின் தொடக்கத் ­தி­லி­ருந்து கலை­ஞர்­கள் பல்­வேறு தடை­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். நடன, நாடக ஒத்­தி­கை­கள், நிகழ்ச்­சி­க­ள், அரங்­கேற்றங்கள் அனைத்துக்கும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­தால் கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக கலை­ஞர்­கள் பயிற்சி செய்­வ­தில்­கூட சவால்­க­ளைச் சந்­தித்து வரு­கின்­ற­னர்.

இருப்­பி­னும், தொழில்­நுட்­பத்­தை­யும் மின்­னி­லக்க மய­மாக்­கத்தை யும் துடிப்­போடு பயன்­ப­டுத்தி கலை­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கும் உத்­தி­களை அவர்­கள் பயன் படுத்தி வரு­கின்­ற­னர்.

சம­கா­லக் கலை­கள் இந்த மாற்­றத்தை எளி­தில் ஏற்­றுக்­கொண்­டா­லும் பர­த­நாட்­டி­யம் போன்ற பாரம்­ப­ரி­யப் படைப்­புக் கலை­க­ளுக்­குத் தொழில்­நுட்­ப­ம­யம் ஒரு நிரந்­தரத் தீர்வா என்ற கேள்­வி எழலாம்.

"கொவிட்-19 எங்­க­ளது கலைப் பய­ணத்தை முடக்­க­வில்லை. கலை­ஞர்­க­ளா­கிய எங்­களை மேலும் சிந்­திக்க வைத்­துள்­ளது, புதுப் புதுப் பரி­மா­ணங்­களில் நட­னக் கலையை உரு­வாக்க ஊக்­கம் தந்துள்ளது.

"கடந்த ஒன்­றரை ஆண்­டாக எங்­க­ளது பாஸ்­கர் கலைகள் கழகம் நட­ன­ம­ணி­களை மீண்­டும் மேடை ஏற்று­வ­தற்­கான வழி­களை ஆராய்ந்­துள்­ளது. மாற்­றத்தை வர­வேற்று புதிய வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது வளர்ச்­சி­யின் அறி­குறி." என்­றார் திரு­மதி சாந்தா பாஸ்­கர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!