பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர்களது இன்றியமையாத பங்கு

தாய்­மொ­ழி­க­ளின் கருத்­த­ரங்கு நிகழ்ச்­சி­யில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல் அங்­கத்­தில் பெற்­றோர்­க­ளால் தாய்­மொ­ழி­யில் சர­ள­மா­கப் பேச இய­லாவிட்டாலும், வீட்டுச் சூழ­லில் அவர்கள் தாய்­மொ­ழி­யில் பேச முனைய வேண்­டும் என்றும், இவ்­வாறு செய்­யும்போது, பிள்­ளை­க­ளுக்குத் தங்களா­லும் தாய்­மொ­ழி­யில் பேச முடி­யம் என்ற நம்­பிக்கை ஏற்படும் என்றும் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

இளம் பிள்­ளை­க­ளு­டன் தாய் மொழியில் ஆழ­மான உரை­யா­டல்­களில் எப்படி ஈடு­ப­டு­வது என்­ப­தைக் குறித்த இந்த ஒரு மணி நேரக் கலந்­து­ரை­யா­டலைக் கல்வி துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங் வழி­ந­டத்­தினனார்.

இக்­க­லந்­து­ரை­யா­ட­லில் பல கல்வி நிபு­ணர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

முந்­தைய தலை­மு­றை­யி­ன­ரோடு ஒப்புநோக்கும்போது தாய்­மொ­ழி­யைக் கற்­றுக்­கொள்­வ­தற்கு யூடி­யூப், இணை­யம் போன்ற அதிக வளங்­கள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அவற்றை முறை­யா­கப் பயன்­படுத்­தித் தாய்­மொழி கற்­றலை வலுப்­ப­டுத்­த­லாம் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

பிள்­ளை­க­ள் தாய்­மொழியில் உரை­யா­டும்போது பிழை­கள் ஏற்பட்டால், அவற்றிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து குறை கூறினால், பிள்ளைகள் தாய்­மொ­ழி­யில் பேசுவதைத் தவிர்க்க முனைவர் என்­றார்.

மாறாக, பிள்ளைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமூட்ட பெற்­றோர் முற்­பட வேண்­டும் என்றும் அமைச்­சர் வலி­யு­றுத்­தினார்.

தாய்மொழியில் பேச முயற்சி செய்யும் பிள்ளைகளைப் பாராட்ட வேண்­டும் என்று கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்ற சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு ரா. அன்­ப­ரசு கூறி­னார்.

தாய்­மொழி கற்­றல் ஒரு நீண்ட பய­ணம் என்­றும் அப்­ப­ய­ணத்­தில் பிள்­ளை­க­ளுக்கு நம்­பிக்கை அளித்­த­வாறு, அவர்­கள் தாய்­மொழி­களில் மேம்­பாடு காண வகை­செய்ய வேண்­டும் என்­றும் அவர் வலியுறுத்தி­னார்.

தேசிய கல்­விக்­க­ழ­கத்­தின் கொள்கை, பாடத்­திட்­டம் மற்­றும் தலை­மைத்­து­வப் பிரி­வின் மூத்த சக பயிற்­று­நர் திரு­வாட்டி கா. குண­வ­தி­யம்­மாள், அண்­மைய மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு அறிக்­கை­யில், ஆங்­கி­லப் புழக்­கம் வீடு­களில் அதி­க­ரித்­துள்­ளது என்­ப­தைச் சுட்­டி­னார். தாய்­மொ­ழி­க­ளின் பயன்­பா­டு குறித்த மனப்­போக்கை மாற்று­வது பெரிய சவா­லாக விளங்­கு­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

அன்­பான, வெளிப்­ப­டை­யாக உணர்ச்­சி­களை வெளி­காட்­டும் கற்­றல் சூழலை உரு­வாக்­கி, பிள்­ளை­களுடைய சின்னஞ்சிறு வெற்­றி­களைக் கொண்­டா­ட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் விறு­வி­றுப்­பான முறை­யில் தாய்­மொழியைக் கற்­பிப்பது கற்­றல் சவால்­களை எதிர்­கொள்ள உத­வும் என்று தாம் நம்­பு­வ­தாகவும் தெரி­வித்­தார்.

பெற்­றோர்­க­ளாக இருக்­கும் உள்­ளூர் பிர­ப­லங்­க­ளின் தாய்­மொழி கற்­பித்­தல் உத்­தி­களைப் பற்றி மேல் விவ­ரம் அறிய, https://www.mtls.edu.sg/ என்ற இணை­யப் பக்­கத்­திற்குச் செல்­ல­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!