அறியாது தவறு செய்தோரை புறக்கணித்துவிடாமல் பக்குவமாகத் திருத்தும் போக்கு

விழிப்­பு­ணர்­வைச் சாடும் ‘வோக்­கி­ஸம்’ தவறு செய்­த­வர்­க­ளைப் புறக்­க­ணிக்­கும் ‘கேன்­சல் கல்ச்­சர்’, உணர்­வு­பூர்­வ­மாக மற்­ற­வரைத் துன்­பு­றுத்­தும் ‘கேஸ்­லை­யி­டிங்’ போன்ற சிந்­த­னை­கள் கடந்த நான்கு ஆண்டு அள­வில் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டை­யே பிர­ப­ல­மா­கி­யுள்­ளன என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா கூறினார். சமூக ஊட­கம் இவற்றை வளர்த்­துள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

“இந்­தச் சிந்­த­னை­க­ளைப் புதிது என்று சொல்­லிவிட முடி­யாது. ஆனால், தற்­போ­தைய தலை­மு­றை­யில் அவை புது அவ­தா­ரத்­தில் பிர­ப­லம் கண்­டுள்­ளன. கடந்த காலத்­தை­விட இப்­போது இச்­சிந்­த­னை­கள் பெரு­க­வும் வேக­மா­கப் பர­வு­வ­தற்­கான தன்­மை­யும் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் அவற்­றின் தாக்­க­மும் பெரி­தாக இருக்­க­லாம்,” என்­றார் அமைச்­சர்.

தவறு செய்த ஒரு­வரை உடனே புறக்­க­ணிப்­ப­தற்­குப் பதி­லா­க சூழ்­நி­லை­யின் உண்மை நில­வ­ரத்­தைப் புரிந்­து­கொண்டு, அதற்கு ஏற்­ற­வாறு கலந்­து­ரை­யா­டலை அமைத்­துக்­கொள்­வதே சிறந்­தது என்­றும் அமைச்­சர் மேலும் அறி­வு­றுத்­தி­னார்.

‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ என்ற சமூ­க­நல அமைப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஏற்­பாடு செய்த இரண்டு பாகக் கருத்­த­ரங்­கின் முதல் பாகத்­தில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து­கொண்டு அமைச்­சர் இந்­தி­ராணி பேசி­னார். ஆகஸ்ட் 15ஆம் தேதி நிகழ்ந்த இரண்­டாம் பாகத்­தில் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்­டார்.

கல்­விக்­க­ழ­கங்­கள், ஆசி­ரி­யர்­கள், கொள்­கைத் தயா­ரிப்­பா­ளர்­கள், அடித்­தளத் தலை­வர்­கள், சமு­தாய ஆர்­வ­லர்­கள் என கிட்டத்­தட்ட 140 பங்­கேற்­பா­ளர்­கள் இந்­நி­கழ்­வில் ஈடு­பட்­ட­னர்.

ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக உரு­மா­றக்­கூ­டிய சூழ்­நி­லையை அமை­திப்­ப­டுத்­த­வும் அனை­வ­ருக்­கும் ஒரு கற்­றல் வாய்ப்­பாக அது அமை­கிறது,” என்­றார் அமைச்­சர் மாலிக்கி.

இரண்­டாம் பாக கலந்­து­ரை­யா­ட­லின் பேச்­சா­ளர் குழு­வில் இருந்த முனை­வர் கல்­பனா விக்­னே‌‌‌சா 2018ஆம் ஆண்­டில் தமக்கு ஏற்­பட்ட சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­தார்.

கடு­மை­யான தலை­வலி பிரச்­சி­னைக்கு நரம்­பி­யல் மருத்­து­வர் ஒரு­வரை தாம் நாடி­ய­போது, தமது கருப்பு நிற தோலை எப்­படி மாற்ற முடி­யாதோ அதைப் போல் தமது தலை­வ­லிக்­கும் எந்­தத் தீர்­வும் இல்லை என அந்த மருத்­து­வர் தம்­மி­டம் கூறி­ய­தா­கக் கூறி­னார். இச்­சம்­பவத்தை ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்ட முனை­வர் விக்­னே‌‌‌சா, மருத்­து­வத் துறை­யின் நடை­மு­றை­க­ளை­யும் அவ­ரைப் போல மற்­ற­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளை­யும் ஒட்டி அப்­ப­திவு நல்ல கலந்­து­ரை­யா­டல்­களை உரு­வாக்­கி­ய­தா­கச் சொன்­னார்.

“ஒரு­வரை தாக்­கு­வ­தற்­குப் பதி­லாக அந்தப் பிரச்­சி­னையை வெளிப்­ப­டுத்­த­லாம். ஒரு­வரை தாழ்த்தி பேசு­வ­தற்­குப் பதி­லாக ஒரு சிந்­தி­னை­யைப் பற்றி வாத­மி­ட­லாம்.

ஒரு குறிப்­பிட்ட இடத்­தில் செய்­யும் குற்­றத்­தை­விட அந்த மனி­தர் பல அம்­சங்­களில் நுட்­ப­மிக்­க­வர்,” என்­றார் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் ஆய்­வா­ள­ரான முனை­வர் விக்­னே‌‌‌சா.

“வளர்ந்து வரும் இணை­யத்­தில் ஒருவித சீர­மைப்பு இருந்து வரு­வ­தாக தெரி­கிறது,” என்­றார் நகைச்­சு­வைக் காணொ­ளி­க­ளை­யும் பதி­வு­க­ளை­யும் தயா­ரிக்­கும் ‘மினிஸ்­திரி ஆஃப் ஃபனி’ என்ற ஊட­கத் தளத்­தின் இணை நிறு­வ­ன­ரா­ன திரு ஹரே‌ஷ் திலாணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!