மோட்டார் பந்தய சகாப்தம் சங்கரதாஸ் மறைவு

1950களிலிருந்து இந்த வட்டாரத்தில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, தமக்கென ஒரு பெயரை உருவாக்கியவர் திரு சீத்தாராம் சங்கரதாஸ்.

வீ. பழ­னிச்­சாமி

மோட்­டார்­சைக்­கிள், விரைவு கார் பந்­த­யம் என்­றாலே அதில் பொது­வாக மேலை­நாட்­ட­வர்­தான் ஆதிக்­கம் செலுத்தி வந்­துள்­ள­னர். அது அந்­தக் காலம் தொட்டு இருந்து வந்­துள்­ளது.

இது­போன்ற எண்­ணம் 1950-60களி­லும் நிலைத்­தி­ருந்த சம­யத்­தில், யாருக்­கும் அவ்­வ­ளவு அறி­மு­கம் இல்­லாத சீத்­தா­ராம் சங்­க­ர­தாஸ் எனும் ஆட­வர் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து இந்த வட்­டா­ரத்­தில் நடை­பெற்ற மோட்­டார் பந்­த­யங்­களில் பங்­கேற்று வெற்­றி­க­ளைக் குவித்­தார்.

குறிப்­பாக, 1956ல் சிங்­கப்­பூர் மோட்­டார் மற்­றும் விளை­யாட்­டுச் சங்­கத்­தில் இடம்­பெற்ற ஒரே இந்­தி­யர் அவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அந்­தக் காலத்­தில், வார­யி­றுதி என்­றாலே ஓல்டு அப்­பர் தாம்­சன் ரோடு பகுதி­ யில் நடை­பெற்ற விறு­வி­றுப்­பான மோட்­டார் சைக்­கிள் மற்­றும் விரைவு கார் பந்­த­யங்­க­ளைப் பார்க்க மக்­கள் கூட்­டம் திர­ண்டிருக்கும்.

பல மோட்­டார் பந்­த­யங்­களில் பல வெற்­றி­க­ளைக் கண்ட திரு தாஸ், பல ஆபத்­து­க­ளை­யும் சந்­தித்து அவற்­றி­லி­ருந்து மயி­ரி­ழை­யில் தப்­பித்தும் இ­ருக்­கி­றார். இதன் கார­ணத்­தா­லேயே அவ­ரது மனைவி சீதா­வும் குடும்­பத்­தா­ரும் இந்­தப் போட்­டி­களில் பங்­கேற்­பதை நிறுத்­தும்­படி அவரை வற்­பு­றுத்தி வந்­த­னர்.

குடும்­பத்­துக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுத்து வந்த திரு தாஸ், குடும்­பத்­தா­ரின் விருப்­பத்­துக்கு இணங்க தாம் அதி­கம் விரும்­பிய மோட்­டார் பந்­த­யங்­

க­ளி­லி­ருந்து ஓய்­வு­பெற்­றார்.

சிங்­கப்­பூ­ரின் பெயரை இந்த வட்­டா­ரத்­தில் நிலை­நாட்­டிய திரு சங்­க­ர­தாஸ், கடந்த மாதம் 27ஆம் தேதி, தமது 91வது வய­தில் இவ்­வு­லக வாழ்க்­கை­யி­லி­ருந்து நிரந்­தர ஓய்­வு­பெற்­றார்.

முதிய வயது கார­ணத்­தால் அவ்­வப்­போது உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்ட திரு தாஸ், சில பக்­க­வா­தப் பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தா­லும் தமது மன­வ­லி­மை­யால் அவற்­றைச் சமா­ளித்து வந்­தார் என்று தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­டார் திரு தாஸின் ஐந்து மகன்­களில் மூத்­த­வ­ரான 63 வயது திரு கஜேந்­தி­ரன்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்­த­லின் வாக்­க­ளிப்பு நாளன்று உற்­சா­கத்­து­டன் வாக்­க­ளிக்­கப் புறப்­பட்ட திரு தாஸ், நிலைத்­த­டு­மாறி கீழே விழுந்­த­தால் அவ­ரது இடுப்­பில் பலத்த காயம் ஏற்­பட்­டது.

மொத்தம் 69 நாள் சிகிச்சை முடிந்து மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வீடு திரும்­பிய திரு தாசின் உடல்­நிலை அப்­போ­தி­லி­ருந்து படிப்­ப­டி­யாக மோச­ம­டை­யத் தொடங்­கி­யது.

கடந்த மாதம் 27ஆம் தேதி காலை­யில் தந்­தைக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டது என்ற தக­வல் அறிந்து அவ­ரது வீட்­டுக்கு விரைந்­தார் மூத்த மகன். ஆனால் சில வினா­டி­களில் அவ­ரது உயிர் பிரிந்­தது.

திரு சங்­க­ர­தா­ஸின் மறைவு பற்றி, அவ­ரது இளைய சகோ­த­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு எஸ். சந்­தி­ர­தாஸ் கூறு­கை­யில், "பல வெற்­றி­ க­ளைச் சாதித்த என் அண்­ணன், பின்­னா­ளில் தமது குடும்­பத்­தா­ரின் முழு ஆத­ர­வு­டன் வாழ்­நாளை மகிழ்ச்­சி­யு­டன் கழித்­தார்," என்­றார்.

சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் தேசிய காற்­பந்து வீரரான திரு எஸ். ராஜ­கோ­பா­லின் மாமா திரு சங்­க­ர­தாஸ் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

"1950களி­லும் 60களின் தொடக்­கத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் மோட்­டார் விளை­யாட்டு அரங்­கில் மிகப் பிர­ப­ல­மா­கத் திகழ்ந்த இந்­தி­ய­ரான என் தந்­தை­யா­ரின் சாத­னை­கள் மறக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற நோக்­கத்­தில் அவ­ரைப் பற்றி வெளி­வந்த பல செய்­திக் கட்­டு­ரை­களை இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­துக்கு நன்­கொ­டை­யாக அளிக்க எங்­கள் குடும்­பம் முடிவு செய்­தது," என்­றார் திரு கஜேந்­தி­ரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!