உடன் வளர்ந்த தமிழார்வத்துக்கு ஊக்கம் ஊட்டிய தந்தை: ஓர் உயர்வின் பின்னணி

இளை­யர்­கள் மற்­றும் குழந்­தை­க­ளி­டையே தமிழ் ஆர்­வத்­தைத் தூண்­டு­வதை நோக்­க­மா­கக் கொண்டு 'தமிழ் மணம்' என்ற நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது, சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர் சங்­கம்.

பிப்­ர­வரி 26ஆம் தேதி இணை­யம் வழி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, வாழும் மொழி­யாக தமிழ் நீடித்து நிலைத்­தி­ருக்க இன்­றைய இளை­யர்­க­ளின் ஈடு­பாடு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­ப­தை­யும் அவர்­

க­ளி­டத்­தில் தமிழ் ஆர்­வத்­தைத் தூண்­டு­வது எவ்­வ­ளவு இன்­றி­ய­மை­யா­தது என்­பதையும் உணர்த்­து­வ­தா­க­ அமைந்­தது.

சிறப்பு விருந்­தி­ன­ராக, தேசிய நூலக வாரி­ய தமிழ் மொழிச் சேவை­கள் பிரி­வின் தலை­வர் திரு

து. அழ­கிய பாண்­டி­யன் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றி­ய­தோடு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு கலந்­து­ரை­யா­டல் மூல­ம் பதில் அளித்­தார்.

அவர் தமது சிறப்­பு­ரை­யில், தமக்கு எவ்­வாறு தமிழ் மொழி மீது ஆர்­வம் ஏற்­பட்­டது என்­பது பற்­றி­யும் அதற்குத் தமது தந்தை எவ்­வ­ளவு ஊக்­க­ம­ளித்­தார் என்­பது பற்றி­ யும் சுவை­பட விவ­ரித்­தார்.

அதே ஆர்­வம், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்கழ­கத்­தில் கணினி அறி­வி­யல் பட்­டம் பெற்ற தம்மை, பின்னாளில் எவ்­வாறு உந்­திச்­சென்று தொலைக்­காட்சி, வானொலி, நூல­கம் என தமிழ் மொழி சம்­பந்­தப்­பட்ட துறைக­ளிலேயே முழுநேர வேலையை அமைத்­துக்கொள்­ளும் வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது என்­ப­தையும் திரு அழகிய பாண்டியன் பகிர்ந்துகொண்­டார்.

தேசிய நூலக வாரி­யம் தமி­ழுக்­கா­கத் தொடர்ந்து வழங்­கிவரும் சேவை­களைப் பட்டியலிட்ட அவர், அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர் சங்­கம், வாரி­யத்­து­டன் கைகோத்து நூல் குறிப்பு எழுதி, ஞாயிறுதோறும் தமிழ் முரசு நாளி­த­ழில் வெளி­வர ­தொண்­டூ­ழி­யம் புரிந்தது பற்­றி­யும் குறிப்­பிட்டார்.

அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர் சங்­கத்­தின் தலை­வர் சௌந்­தர ராஜன், துணைத்­ த­லை­வர் முத்­து­மா­ணிக்­கம், பேரா­சி­ரி­யர் முனை­வர் சுப. திண்­ணப்­பன், ஏற்­பாட்­டுக் குழுத்­

த­லை­வர் கும­ரே­சன் ஆகி­யோர் உரை­யாற்­றிய நிகழ்ச்­சியை செல்­வ­முத்­து­கு­ம­ரன் வழி நடத்­தி­னார்.

'தமிழ் மணம்' என்ற தலைப்பு, தமி­ழைப் பரப்­பு­கின்ற நோக்­கத்­து­டன் எவ்­வ­ளவு ஒன்­றிப்­போ­யி­ருக்­கின்­றது என்­ப­தைப் பற்­றிப் பேசிய முனை­வர் திண்­ணப்­பன், தமி­ழிலே இருக்­கக்­கூ­டிய மூன்று "ந"கரங்­க­ளுக்­கி­டை­யே­யான (ண, ன, ந) சிறப்பு பற்­றி­யும் எடுத்­து­ரைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!