சீனாவில் பரவும் கொவிட்-19 கிருமி வகைகள் மலேசியாவிலும் கண்டறியப்பட்டன
சீனாவில் பரவிக்கொண்டிருக்கும் கொவிட்-19 கிருமி வகைகள் மலேசியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஸலைஹா முஸ்தஃபா இதைத் தெரிவித்தார்.
உலகச் சுகாதார நிறுவனம் அளித்த தகவல்களில் இது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதுவரை போடப்பட்டு வந்த ஒற்றை ஆற்றல்கொண்ட தடுப்பூசி ஒருவரை மோசமாக நோய்வாய்ப்படாமல் காக்கும் என்று டாக்டர் ஸலைஹா கூறினார். மலேசியாவில் விரைவில் இருவகை திறன்கொண்ட தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவை விநியோகிக்கப்பட்ட பிறகு அதைப் போட்டுக்கொள்ள யார் தகுதிபெறுவர் என்ற விவரங்கள் அறிவிக்கப்படும்.